மெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தை SAC என்ன சொல்றார் பாருங்க.!

Bookmark and Share

மெர்சல் சர்ச்சை குறித்து விஜயின் தந்தை SAC என்ன சொல்றார் பாருங்க.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளி விருந்தாக வெளியானது. படம் ரிலீசுக்கு முன்பு பல தடைகளை தாண்டி வெற்றிகரமாக வெளியானது.

தற்போது படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசாணை பிஜேபி அரசு படத்தில் இருந்து ஜி.எஸ்.டி சம்மந்தமான காட்சிகளை நீக்க வேண்டும் இல்லையேல் நடப்பதே வேறு என்பது போல படக்குழுவினரிடம் கூறி வருகிறது.

இது தளபதி ரசிகர்களை மட்டுமல்லாமல் தல ரசிகர்கள் உட்பட அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இதனால் பிஜேபி-க்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகர் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் ஒரு படத்தை சென்சார் அமைப்பு பார்த்து விட்டு அதனை அனுமதித்த பிறகு அதனை விமர்சிப்பது தவறு. இது மக்கள் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கூறியுள்ளார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions