ஆஸ்துமா அவதியிலிருந்து யோகா தான் என்னை மீட்டது – எஸ்.ஏ.சந்திரசேகரன்!

Bookmark and Share

ஆஸ்துமா அவதியிலிருந்து யோகா தான் என்னை மீட்டது – எஸ்.ஏ.சந்திரசேகரன்!

சென்னை வடபழனி சிகரம் டவரில் யோகா விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பாபா சாகேப் விருது பெற்ற மெய்ஞானி ஆத்மநம்பி தலைமை தாங்கினார்.

சிறப்பு அமைப்பாளராக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், முன்னாள் அண்ணா பல்கலை கழக துணை வேந்தர் டாக்டர் கலாநிதி, திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன், திரைப்பட தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசிய போது, உடலும் – உள்ளமும் வலிமையாக இருக்க வேண்டுமென்றால் யோகா ரொம்ப முக்கியம். தண்ணீரால் தினசரி உடம்பை சுத்தம் செய்வதை போல, யோகாவால் மட்டுமே உட்புற உடம்பை சுத்தம் செய்ய முடியும், இந்த வயதிலும் இவ்வளவு இளமையாகவும், சுறுசுறுப்பாகவும் எப்படி இருக்கிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அதற்கு ஒரே காரணம் தினசரி ஒரு மணிநேரம் நான் செய்யும் யோகா தான்.

20 வருடங்களுக்கு முன்பு இயக்குனராக பிஸியாக இருந்த போது ஆஸ்துமா வியாதியால் ரொம்ப கஷ்டப்பட்டேன். பல விதமான அலோபதி மருந்துகளை சாப்பிட்டும் எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. அப்போது தான் சத்குரு ஜக்கி வாசுதேவ் மூலம் யோகா செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

கொஞ்ச கொஞ்சமாக ஆஸ்துமா என்னை விட்டு விலகுவதை அறிந்தேன். யோகா மூலம் புது உற்சாகத்தையும், புது தெம்பையும் பெறுவதை உணர முடிந்தது. இன்று வரை யோகா செய்யாமல் நான் வீட்டை விட்டு வெளியே வரமாட்டேன்.

விவேகானந்தர், புத்தர், இயேசு, நபிகள் என எல்லா மதத்தின் மகான்களும் யோகாவின் வலிமையை நமக்கு தந்துவிட்டு சென்றுள்ளார்கள். நாம்தான் பின்பற்ற தவறி விட்டோம். இன்றைய இளைஞர்கள் செல்போன், கம்ப்யூட்டரே கதி என்று அதற்கு அடிமையாகி விட்டனர்.

செல்போன் கம்ப்யூட்டர் இல்லையென்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் ஆகிவிடுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டுமென்றால் இளைஞர்கள் யோகாவை தினசரி செய்ய வேண்டும். நம்மை பிடித்த பீடைகள், பிரச்சனைகள், தடைகள் அனைத்தும் தகர்தப்பட்டு எல்லோரும் புதிய உலகிற்குள் இருப்பதுபோல் சந்தோசமாக இருப்பீர்கள் என்று பேசினார்.

தமிழிசை சௌந்தர்ராஜன் பேசும் போது, இன்றைய அவசர யுகத்தில் யோகா ரொம்ப முக்கியம். நமக்கு இன்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவைப்படுகிறது. இதற்கு ஒரே மருந்து யோகா தான். டாஸ்மாக் கடைகளால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்கள்.

மதுவிலிருந்து நாட்டை மீட்க யோகா ஒன்றே சிறந்த வழி என்று தமிழிசை சௌந்தர்ராஜன் பேசினார். இதை தொடர்ந்து சிகரம் பவுண்டேஷன் சந்திரசேகரன், பி.டி.செல்வக்குமார் ஆகியோரும் பேசினார்கள்.

 


Post your comment

Related News
தந்தையர் தினத்தில் விஜய் குடும்பத்தில் ஒரு ஸ்பெஷல்
விஜய்யின் அப்பா இப்படி ஒரு காரியம் செய்தாரா- அதிருப்தியில் தயாரிப்பாளர் சங்கம்
விஜய்யின் அரசியலுக்கு வரமாட்டாரா? எஸ்.ஏ.சி விளக்கம்
பிரபல இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் அனுமதி!
தங்கை பிரிவு தாங்காமல் விஜய் அழுதது வேதனையானது – SAC உருக்கம்!
தந்தையின் ஆசையை நிறைவேற்றுவரா விஜய்?
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து காதலித்தால் இளமையாக இருக்கலாம்: விஜய்யின் தந்தை பேட்டி
மனைவியைப்போல் சினிமாவையும் உண்மையாக காதலிக்கிறேன்: எஸ்.ஏ.சந்திரசேகரன்
தயாரிப்பாளர் சங்க தேர்தல் முதல்வருடன் எஸ்.ஏ.சந்திரசேகர் சந்திப்பு ?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions