சச்சின் டெண்டுல்கர் பார்க்கப்போகும் ஸ்ரீமந்துடு படம்

Bookmark and Share

சச்சின் டெண்டுல்கர் பார்க்கப்போகும் ஸ்ரீமந்துடு படம்

டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வெளிவந்த ஸ்ரீமந்துடு திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 27) ஸ்ரீமந்துடு படத்தில் நீளம் கருதி குறைக்கப்பட்ட இரண்டு காட்சிகள் இணைக்கப்பட்டு மீண்டும் அப்படம் திரையிடப்பட்டது.

இந்நிலையில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றுள்ள இப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் ராஜ்ய சபா உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கருக்கு காட்ட படக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

பொழுபோக்கு அம்சங்களுடன் கிராமங்களை தத்தெடுத்தல் தொடர்பான சமூக சிந்தனை கொண்ட இப்படம் அரசியல் பிரபலங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது.

தற்போது சச்சின் டெண்டுல்கருக்கும் இப்படம் இந்த வாரத்திற்குள் திரையிட்டுக் காட்டப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. சச்சின் டெண்டுல்கர் நெல்லூரில் உள்ள புட்டம்ராஜு கன்திரிகா கிராமத்தை தத்தெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
தளபதி விஜய்க்கு அவர் திரைப்பயணத்தில் மிகவும் பிடித்த படம் இதுதானாம்
சிம்புவை போல ரசிகர்கள் கொடுத்த பெயரை வேண்டாம் என்று சொன்ன பிரபல நடிகர்
தன் படத்திற்காக கிரிக்கெட் வீரர் இத்தனை கோடி கொடுத்தாரா?
சச்சின் பல கோடி கனவுகள் 4 நாள் வசூல்- முழு விவரம்
கிரிக்கெட் விளையாட்டின் கடவுள் சச்சின் படத்தின் முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
சச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல
ரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்
”படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்குதான் என முன்னரே தோன்றியது” - சச்சின் டெண்டுல்கர்
இது கடவுள் கொடுத்த வரம்! ஏ.ஆர்.ரகுமானுக்கு சச்சின் புகழாரம்
ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்திய சச்சின்! என்ன சொன்னார் தெரியுமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions