
விஜய்காந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ராஜயப்பா நடிக்கின்றனர். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வரும் நிலையில், இப்படத்தை தணிக்கை குழுவிற்கு அனுப்பியிருந்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இறுதி கட்ட பணியில் தீவிரம் காண்பித்து வந்த படக்குழுவினர் தற்போது அப்பணிகளை முடித்து விட்டு ஏப்ரல் 2ம் தேதி படத்தை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Post your comment