டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் வெளியாகும் சகாப்தம்

Bookmark and Share

டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டுடன் வெளியாகும் சகாப்தம்

விஜய்காந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சகாப்தம்’. இதில் சண்முக பாண்டியனுக்கு ஜோடியாக நேஹாஹிங், சுப்ராஜயப்பா நடிக்கின்றனர். ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். சுரேந்திரன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் மற்றும் திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களை கடந்து வரவேற்பு பெற்று வருகிறது.

இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வரும் நிலையில், தற்போது இப்படம் உயர்தர தொழில்நுட்பமான டால்பி அட்மாஸ் சவுண்ட் எபெக்ட்டில் வெளிவரவுள்ளது. இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழில் ஒருசில படங்களே வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
சத்தமே இல்லாமல் போன \'சகாப்தம்\'
3 படங்கள்..முதல் நாள் வரவேற்பு எப்படி ?
சகாப்தம் படம் ரிலீஸ் சண்முக பாண்டியன் ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்
500 தியேட்டர்களில் சகாப்தம் ரிலீசாகிறது!
“மன்னிப்பு எங்க பரம்பரைக்கே பிடிக்காத வார்த்தை”: சொல்வது சகாப்தம் சண்முக பாண்டியன்
கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!
ஏப்ரல் 2ம் தேதி சகாப்தம் படைக்க வரும் சண்முக பாண்டியன்
கேப்டனின் கண்களை சிவக்க வைக்கும் இசை
சகாப்தம் எப்போது ரிலீஸ்?
2 லட்சம் YouTube ஹிட்டுகளை தாண்டியது \'சகாப்தம்\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions