கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!

Bookmark and Share

கமலின் உத்தம வில்லனுடன் மோதும் விஜயகாந்த் மகன்!

விஜய் காந்த் மகன் சண்முகப்பாண்டியன் நாயகனாக அறிமுகமாகும் சகாப்தம் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியன்று வெளியாவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அன்றுதான் கமல் நடித்த உத்தம வில்லன் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், கமல் படத்துடன் விஜய்காந்த் மகன் படம் மோதப் போகிறதா என்ற கேள்வி கோடம்பாக்கத்தில் உலா வர ஆரம்பித்துள்ளது.

சகாப்தம் படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள எல்கே சுதீஷ், படத்தின் வெளியீடு குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சகாப்தம் படம் வரும் ஏப்ரல் 2-ம் தேதி உலகெங்கும் வெளியாகும் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்துக்கு தொடர்ந்து ஆதரவளித்து வரும் அனைவருக்கும் நன்றி," என்று கூறியுள்ளார். சகாப்தம் படத்தில் சண்முகப் பாண்டியனுடன், விஜயகாந்தும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

நாயகிகளாக நேஹா, சுப்ரா நடித்துள்ளனர். சுரேந்திரன் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்காக கணிசமான திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணியில் மும்முரமாக உள்ளார் எல்கே சுதீஷ்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions