சத்தமே இல்லாமல் போன 'சகாப்தம்'

Bookmark and Share

சத்தமே இல்லாமல் போன 'சகாப்தம்'

ரஜினிகாந்த், கமல்ஹாசன் தமிழ்த் திரையுலகில் கோலோச்சிக் கொண்டிருந்த 80களில் ஆக்ஷன் படங்களில் நடிக்க ஆரம்பித்து தனக்கென ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை, கிராமத்துப் பக்கங்களில் அதிகமாகவே வளர்த்துக் கொண்டவர் விஜயகாந்த்.

அந்தக் காலத்தில் கிராமப்புறங்களில் ரஜினிகாந்தை விட விஜயகாந்துக்குத்தான் ரசிகர் மன்றங்கள் அதிகமிருக்கும். பல வெள்ளி விழா படங்களையும், வெற்றிப் படங்களையும் கொடுத்த விஜயகாந்த் தற்போது அரசியலில் பிஸியாகிவிட்டதால் சினிமாவை விட்டு ஒதுங்கியிருக்கிறார்.

இருந்தாலும் தன் மகன் சண்முகப் பாண்டியனை நாயகனாக அறிமுகப்படுத்தி 'சகாப்தம்' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். மிகவும் பிரம்மாண்டமான பூஜை, இசை வெளியீடு என்று எல்லாம் நடத்தினாலும் படத்தை வெளியிட்ட பிறகும் சத்தமேயில்லாமல் போய்விட்டது.

ஒரு ஆக்ஷன் நாயகனாக வெற்றிகரமாக வலம் வந்த விஜயகாந்த் அவருடைய மகனை இப்படி அறிமுகப்படுத்தி விட்டாரா என அவரது ரசிகர்களே வருந்தும் அளவிற்கு ஒரு மோசமான படத்தைத் தயாரித்து வெளியிட்டுவிட்டார்கள்.

சினிமாவில் பெரிய பின்னணி இல்லாதவர்களே சரியான படங்களையும், கதைகளையும், இயக்குனர்களையும் தேர்வு செய்து வெற்றி பெறும் போது திரையுலகத்தில் இத்தனை அனுபவம் மிக்க விஜயகாந்த், மகன் சண்முகப்பாண்டியனை அறிமுகப்படுத்திய விதத்தில் 'கோட்டை' விட்டுவிட்டார் என்று அவருக்கு நெருக்கமானவர்களே விமர்சிக்கிறார்களாம்.

 


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
2.0 டீசர் தேதி இதுவா..? அன்றாவது டீசர் வருமா..?
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..!
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions