இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை!

Bookmark and Share

இந்தி நடிகர் சயீப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை!

இந்தி நடிகர் சயீப் அலிகான் தனது தயாரிப்பில் இந்தி படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை அக்ஷத் வர்மா இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பை பவாயில் நடந்தது. சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது, எதிர்பாராதவிதமாக சயீப் அலிகான் கீழே விழுந்து காயம் அடைந்தார்.

இதில், அவரது கையின் கட்டை விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை படக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக அந்தேரியில் உள்ள கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு கட்டை விரலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பின் சயீப் அலிகான் உடல் நலத்துடன் இருப்பதாக அவரது சகோதரி சோஹா தெரிவித்தார். சிகிச்சை முடிந்து அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்பின் போது நடிகர் சயீப் அலிகான் காயம் அடைவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதம் ‘ரங்கூன்’ படிப்பின் போதும், 2011–ம் ஆண்டு ‘ஏஜெண்டு வினோத்’ என்ற படத்தின் சண்டை காட்சியின் போதும் காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions