தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி

Bookmark and Share

தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் : சாய் பல்லவி

வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து இருப்பவர் சாய்பல்லவி. கோத்தகிரியில் பிறந்த தமிழ் பெண்ணான இவர் படிப்பை முடிக்க ஒரு வருடம் இருந்தபோது ‘பிரேமம்’ மலையாள படத்தில் பொழுதுபோக்குக்காக நடித்தார். இது மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இவர் நடித்த ‘மலர் டீச்சர்’ பாத்திரம் பிரபலமாகி, அனைவராலும் பேசப்பட்டது.

மீதம் இருந்த ஒரு வருட படிப்பை முடிப்பதற்கு முன்பே ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. என்றாலும் படிப்பை முடித்தார். அதன்பிறகு ‘களி’ என்ற மலையாள படத்திலும் ‘பிந்தா’ என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார். ஆனால் தமிழ் படத்தில் நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லையாம். இதுபற்றி கூறியுள்ள சாய்பல்லவி....

“தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் இதுவரை யாரும் அழைக்கவில்லை. நடிக்க வந்த பிறகு இப்படித்தான் நடிப்பேன். அப்படி நடிக்கமாட்டேன் என்று சொல்லக்கூடாது.

பாத்திரத்துக்கு தேவை என்றால் அதற்கு ஏற்ப நடிப்பதில் தவறு இல்லை. திணிக்கப்பட்ட காட்சி என்றால் அதில் நடிக்க மாட்டேன். தமிழில் நல்ல கதையையும், பாத்திரத்தையும் எதிர்பார்த்துக் கொண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions