சாய் பல்லவிக்காக எடையைக் குறைக்கும் கார்த்தி!

Bookmark and Share

சாய் பல்லவிக்காக எடையைக் குறைக்கும் கார்த்தி!

மணிரத்னத்தின் அடுத்த படத்தில் தான் நாயகனாக நடிப்பதை நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார். கடந்தாண்டில் வெளியாகி ஹிட்டடித்த ஓ காதல் கண்மணி படத்திற்குப் பின் மணிரத்னம் இயக்கப் போகும் அடுத்த படம் என்ன? யாரை இயக்கப் போகிறார்? என்பது கேள்விக்குறியாகவே இருந்தது.

மணிரத்னம் அடுத்து இயக்கப் போவது இவரைத்தான் என்று வரிசையாக துல்கர் சல்மான், நானி, கார்த்தி ஆகிய நடிகர்களின் பெயர்கள் அடிபட்டன. இந்நிலையில் மணிரத்னத்தின் அடுத்த ஹீரோ கார்த்தி என்பது தற்போது உறுதியாகி இருக்கிறது. இதனை நடிகர் கார்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி செய்திருக்கிறார்.

இதில் நடிப்பதற்காக தான் உடல் எடையைக் குறைக்கப் போவதாகவும், தனக்கு ஜோடியாக சாய் பல்லவி (பிரேமம்) நடிப்பதாகவும் கார்த்தி தெரிவித்திருக்கிறார்.

இந்த படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக மணிரத்னத்தின் உதவி இயக்குனராக ஆயுத எழுத்து படத்தில் கார்த்தி பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
படம் நஷ்டமடைந்ததால் சம்பளத்தை விட்டுக்கொடுத்த சாய் பல்லவி
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை தன்ஷிகா
அஜித் வில்லனுடன் மோதும் தன்ஷிகா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions