இதுவும் போச்சா…! புருடா மேல் புருடா விடும் நடிகை சாய் பல்லவி..!

Bookmark and Share

இதுவும் போச்சா…! புருடா மேல் புருடா விடும் நடிகை சாய் பல்லவி..!

விக்ரம் நடிப்பில் வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கும் படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஆனால் இப்படம் வடசென்னையில் நடிக்கும் ரவுடிசம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகிறது. இப்படத்தின் மூலம் விக்ரமுடன் முதன்முறையாக சூரி நடிக்கிறார். மேலும். இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன், சாய் பல்லவி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. இறுதியாக சாய்பல்லவி ஒப்பந்தமானார். அதையடுத்து அவருக்கு அட்வான்சும் கொடுக்கப்பட்டிருந்தது.

அதனால், பிப்ரவரி மாதம் 6-ந்தேதி முதல் சென்னையிலுள்ள பின்னி மில்லில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், சாய்பல்லவி தெலுங்கு படங்களில் நடித்து வருவதால் மார்ச் மாதம் கால்சீட் தருவதாக சொல்ல, அதற்கும் படக்குழு ஒத்துழைப்பு கொடுத்தது. இந்நிலையில், தற்போது மார்ச் மாதமும் தன்னால் கால்சீட் தர முடியாது என்று கூறிவிட்டாராம் சாய்பல்லவி. அதன்காரணமாக, அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டு, அவருக்கு கொடுத்த அட்வான்ஸை திரும்பப் பெறுகின்றனர்.

ஆனால், நடிகை சாய்பல்லவிக்கு அவ்வளவு பிசியான பட வேலைகள் எதுவும் இல்லையாம், ஹீரோவின் வயதை பார்த்து தான் நடிக்கலாமா? வேண்டாமா? என்று முடிவு செய்கிறாராம். இதனால் தான் கால்ஷீட் இல்லை, நான் ரொம்ப பிசி என்று புருடா விட்டுகொண்டிருக்கிறாராம். முன்னதாக, தல57 படத்திலும் அஜித்-ன் வயதை மனதில் வைத்து கால்ஷிட் இல்லை என்று புருடா விட்டார் சாய்பல்லவி என்பது குறிப்பிடத்தக்கது.

இனிமேல், எனக்கு 2070-ம் ஆண்டுவரை கால்ஷீட் இல்லை என்று சொன்னாலும் சொல்லுவாங்க இந்த புருடா பல்லவி.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions