சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!

Bookmark and Share

சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் கரு!

சில இயக்குனர்களுக்கு மட்டுமே இசை ஞானம் மேலோங்கி இருக்கும். அது அவர்களது பட பாடல்களிலும் பின்னணி இசையிலும் பிரதிபலிக்கும். இந்த வகையை சேர்ந்தவர் தான் இயக்குனர் விஜய்.

அவரது முதல் படத்திலிருந்து அருமையான பாடல்கள் மற்றும் மறக்கமுடியாத பின்னணி இசைகளை தந்துள்ளதால் அவரது அடுத்த படமான 'லைகாவின் கரு' படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இது நடிகர் நாக சௌர்யா , நடிகை சாய் பல்லவியின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இசையமைப்பாளர் சாம் CS - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் படம் இது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ,ரிலீசான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. 

இது குறித்து இயக்குனர் விஜய் பேசுகையில் , '' சமீபகாலத்தில் தமிழ் சினிமாவின் சிறந்த கண்டுபிடிப்பு இசையமைப்பாளர் சாம் CS. கதையையும், பாடல்களின் சூழ்நிலையையும் சரியாக புரிந்துகொண்டு அசத்துபவர் அவர்.

இந்த படத்தின் அவரது பாடல்கள் எனது எல்லா  படங்களின் மிக சிறந்த பாடல்களில் பட்டியலில் நிச்சயம் இடம் பெறும். 'லைகாவின்  கரு' படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் தந்திருக்கும் வரவேற்பு எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.ஏனென்றால் நான் அதை எதிர்பார்த்ததுதான்.

இந்த பாடல்களை போலவே 'லைக்காவின் கரு' படமும் ஜீவனுடன் அழகாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் '' இந்த  படத்தை 'Lyca Productions' நிறுவனம் தயாரித்துள்ளது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில், ஆண்டனியின் படத்தொகுப்பில் 'லைகாவின் கரு' உருவாகியுள்ளது.


Post your comment





Related News
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்
இதுக்கு தான் கிளாமரா நடிக்காம இருக்கேன் - ரகசியத்தை போட்டுடைத்த மலர் டீச்சர்.!
என்னமா இது? பிரபல இயக்குனரிடமு வாங்கி கட்டி கொண்ட சாய் பல்லவி - என்னாச்சு?
மாரி 2 படம் பற்றிய முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு - ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்.!
அவன் மட்டும் என் கையில கிடைச்சான், அவ்ளோ தான் - உச்சகட்ட கடுப்பில் சாய் பல்லவி.!
ஆங்கிலம் பேசி பழகிக்கொள்ளுங்கள் - ரஜினி; ஆங்கிலம் வேண்டாம் வீட்டில் தமிழ்பேசி பழகிக் கொள்ளுங்கள்- தமிழிசை!
ட்ராபிக்கில் சிக்கிய சாய் பல்லவி செய்த வேலை, ஷாக்கான ரசிகர்கள் - லீக்கான புகைப்படம் உள்ளே.!
விஜய் சார் தான் இவை அனைத்திற்கும் காரணம்- சாய் பல்லவி ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions