முதல் படத்திலேயே ரசிகர்களை கிறங்கடித்த சாய் பல்லவி..!

Bookmark and Share

முதல் படத்திலேயே ரசிகர்களை கிறங்கடித்த சாய் பல்லவி..!

வழக்கமாக மலையாள திரையுலகில் இருந்து நம் தமிழ் சினிமா இயக்குனர்கள்தான் நடிகைகளை கடன் வாங்குவது வழக்கம்.. பெரும்பாலும் அந்த நடிகைகளும் மலையாளிகளாகவே தான் இருப்பார்கள்.. ஆனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு பெண், மலையாள இயக்குனரால் மலையாளப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று தொடர் பாராட்டுக்களால் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார்.

அவர்தான் சமீபத்தில் வெளியான 'பிரேமம்' படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்திருந்த சாய் பல்லவி. படத்தில் நிவின்பாலி கல்லூரி மாணவராகவும், இவர் அவருக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் லெக்சரராகவும் நடித்திருந்தனர்.

முகபாவங்களில் மட்டுமல்லாது நடிப்பிலும் பின்னி பெடலெடுத்திருந்த சாய் பல்லவி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர். டாக்டருக்கு படித்திருக்கும் இவர் அடுத்ததாக மேல்படிப்புக்காக ஜார்ஜியாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

ஒரு விளம்பரத்தில் இவரை பார்த்த இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இவரை அப்படியே அள்ளிக்கொண்டு வந்து சினிமாவில் நடிக்கவைத்துவிட்டார்.. படிப்பு போக மீதி நேரங்களில் சினிமாவில் நடிக்க தனக்கு தடையேதுமில்லை என்கிறார் சாய் பல்லவி.


Post your comment





Related News
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பாரீஸில் அவ்வளவு டென்ஷனிலும் இயக்குனரிடம் விஜய்சேதுபதி கேட்ட கேள்வியை பாருங்க
பெரும் எதிர்பார்ப்பில் விஜய் சேதுபதியின் ஜூங்கா!
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
நாக சவுரியாவுடன் மோதலா? - நடிகை சாய் பல்லவி மீண்டும் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions