டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா

Bookmark and Share

டோலிவுட்டில் வில்லனாக களம் இறங்கும் நடிகர் பிரசன்னா

தமிழில் ஹீரோவாக ஒரு சில படங்கள் நடித்தவர் பிரசன்னா. தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறையவே அஞ்சாதே படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார். பிறகு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நடிகர் பிரசன்னா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இந்நிலையில் சாய் தரண் தேஜ் நாயகனாக நடிக்கும் ”ஜவான்” படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்கவிருப்பதாக தகவல் வெளிவந்ததுள்ளது. இதனை அப்பட இயக்குனர் ரவியும் உறுதி செய்துள்ளார்.

நாகார்ஜூனா நடிப்பில் 2013ல் வெளிந்த “பாய்” படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த பிரசன்னா, நான்கு வருட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கின்றார்.

இப்படத்தில் சாய் தரண் தேஜிற்கு ஜோடியாக மெஹரீன் நடிக்கின்றார். இப்பட பூஜையில் கலந்து கொண்ட ஜூனியர் என்.டி.ஆர் படப்பிடிப்பை துவங்கி வைத்தார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions