நடிகர் சைப் அலி கானின் பத்ம ஸ்ரீ விருது பறிபோகிறது?

Bookmark and Share

நடிகர் சைப் அலி கானின் பத்ம ஸ்ரீ விருது பறிபோகிறது?

பாலிவுட்டின் பிரபல கதாநாயகனாக இருக்கும் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கரினா கபூரின் கணவரான சைப் அலி கான் மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் கடந்த ஆண்டு தகராறில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன. இதை தொடர்ந்து மும்பை கோர்ட்டில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதை அடிப்படையாக வைத்து அவருக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப்பெற வேண்டும் என பத்ம விருது கமிட்டிக்கு சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அனுப்பினார்.

இது தொடர்பாக எந்த பதிலும் கிடைக்காததால், இந்த புகார் மீது எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன? என்று தகவல் அறியும் சட்டத்தின் மூலம் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு தற்போது பதில் அளித்துள்ள மத்திய அரசு, உணவகத்தில் சைப் அலி கான் தகராறு செய்தது தொடர்பான புகார் விபரங்களை உடனடியாக தெரிவிக்கும்படி மும்பை போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் சைப் அலி கானுக்கு வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் கணித்துள்ளன.


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் பெயர் அறிவிப்பு
புதிய பரிமாணத்தில் வெளியாகும் வசந்த மாளிகை
பேய் படங்களில் ஆர்வம் காட்டும் அஞ்சலி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions