சாய்பாபா பாடல் பாடிய சைந்தவி!

Bookmark and Share

சாய்பாபா பாடல் பாடிய சைந்தவி!

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-சதா நடித்த அந்நியன் படத்தில் அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற ஹிட் பாடலில் அறிமுகமானவர் பாடகி சைந்தவி. அந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.

முதல் பாடலே சூப்பர் ஹிட் என்பதால் அதன் பிறகு அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிவந்தார் சைந்தவி. அந்த வகையில், தொட்டி ஜெயாவில் அச்சு வெல்ல கரும்பே, கண்ணாமூச்சு ஏனடா படத்தில் கண்ணாமூச்சு ஆட்டம், சுறாவில் தஞ்சாவூர் ஜில்லாக்காரி, பையாவில் அடடா மழைடா அடமழைடா, தலைவாவில் யார் இந்த சாலையோரம், கப்பல் படத்தில் காதல் கசாட்டா என பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சைந்தவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷை திருமணம் செய்து கொண்ட பிறகும் பின்னணி பாடிக்கொண்டே அவரது இசைப்பணியிலும் உதவி செய்து வருகிறார்.

மேலும், சிறிய இசையமைப்பாளர், பெரிய இசையமைப்பாளர் என்ற பாகுபாடு எதுவும் பார்க்காத சைந்தவி, வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் பாட அழைத்தாலும் தனது தொழிலுக்கு மரியாதை கொடுத்து உடனே சென்று பாடிக்கொடுக்கிறார்.

சமீபத்தில்கூட தஷியின் இசையில் புதிய மகான் என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடியிருக்கிறார் சைந்தவி. சாய்பாபாவின் அற்புதங்களை சொல்லும் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சாய்பாபாவை வேண்டுவது போல் உருக்கமாக பாடியிருக்கிறாராம் சைந்தவி.

அதோடு, பாடலை பாடி முடித்தபிறகு சில இடங்களில் தனக்கு திருப்தி ஏற்படாமல் போக, அந்த வரிகளை ரீடேக் எடுத்துக்கொள்ளுமாறு சொல்லி மீண்டும் பாடிக்கொடுத்தாராம் சைந்தவி.


Post your comment





Related News
இன்று காலை காதலி சைந்தவியை கரம்பிடித்தார் ஜீ வி பிரகாஷ் - திரையுலகம் வாழ்த்து.
ஜீவி பிரகாஷ் - சைந்தவி திருணம்: தல அஜீத்துக்கு ஸ்பெஷல் அழைப்பு.
ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம்: முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பு.
பாடகிக்கு பொம்மை கொடுத்து கிறுங்கடித்த இசையமைப்பாளர்!
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி திருமணத்தேதி அறிவிப்பு!
ஆ இதுக்கா இப்படி வெட்கம் ; ஜீவி பிரகாஷ் சைந்தவி!
ஜனவரியில் திருமணம் ஜீ.வி.பிரகாஷ் அறிவிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions