அம்மாவால் படவாய்ப்புகளை இழந்த சாய் பிரசாந்த்

Bookmark and Share

அம்மாவால் படவாய்ப்புகளை இழந்த சாய் பிரசாந்த்

தன் அம்மா, சென்சார் போர்டு அதிகாரியாக இருந்ததால், தனக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று நடிகர் சாய்பிரசாந்த் கூறியுள்ளார்.  ஆயா வட சுட்ட கதை படத்தில் முன்னணி கேரக்டரில் நடித்தவர் சாய்பிரசாந்த்.

இதுகுறித்து சாய்பிரசாந்த் கூறியதாவது,  

டைரக்டர் ஞான.ராஜசேகரன் இயக்கத்தில் உருவான பாரதி படத்தில் நான் திரையுலகிற்கு அறிமுகமானேன். ஆனால், படவாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்காத காரணத்தினால், டிவி சீரியல்கள் பக்கம் போனேன்.

இதுவரை, 450 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளேன். எனது அம்மா லலிதா சுபாஷ், சென்சார் போர்டு அதிகாரியாக இருந்துள்ளார். அதன் காரணமாகவே, படத்தில் நடிக்க என்னை அணுகவே பலர் பயந்தனர்.

இதனால், எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 22 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு, தற்போது சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து வருகிறது. தற்போது ஆயா வட சுட்ட கதை படத்தில் நடித்துள்ளேன்.

பல புதிய படங்கள் குறித்து பேசிவருகிறேன். 135 கிலோவாக இருந்த எனது உடல் எடையை, தற்போது 85 ஆக குறைத்துள்ளேன். வில்லன் கேரக்டரில் நடிக்கவே தான் மிகவும் விரும்புவதாக சாய் பிரசாந்த் கூறினார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions