இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி

Bookmark and Share

இந்தி நடிகர் திலீப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி

இந்தி திரையுலகின் பழம்பெரும் கதாநாயகன் நடிகர் திலீப் குமார்(93) உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பை:

மதுமதி, தேவதாஸ், முகல்-இ-ஆஸம், கங்கா ஜமுனா உள்ளிட்ட பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்தவர் திலீப் குமார். இவரது நடிப்பில் வெளியான ராம் அவுர் ஷியாம் என்ற திரைப்படத்தை தழுவி எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளியான எங்க வீட்டுப் பிள்ளை படம் வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்தது.

பாலிவுட் முன்னாள் கதாநாயகி சாய்ரா பானுவை திருமணம் செய்த திலீப் குமார், கடைசியாக 1998-ம் ஆண்டில் வெளியான ‘கிலா’ படத்தில் நடித்திருந்தார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து, மும்பையில் உள்ள வீட்டில் பூரண ஓய்வெடுத்து வந்த திலீப் குமாருக்கு திடீரென காலில் வீக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மும்பையில் உள்ள லீலாவதி ஆஸ்பத்திரியில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.

வரும் 11-ம் தேதி 94-வது பிறந்தநாள் காணும் திலீப் குமாரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், கவலைப்பட எதுவும் இல்லை என்றும் அவரது மனைவி சாய்ரா பானு குறிப்பிட்டுள்ளார். 

இந்திய சினிமாத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்படும் பாபா சாகேப் பால்கே விருதை 1994-ம் ஆண்டிலும், மத்திய அரசின் மிகஉயரிய விருதுகளில் ஒன்றான பத்மவிபூஷன் விருதினை கடந்த 2015-ம் ஆண்டும் திலீப் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
தேவையானி மகளுக்கு பிடித்த அஜித்- ராஜகுமாரனின் ரியாக்‌ஷன்
ஆர்.கே. நகரில் சரத்குமாரின் சமக வேட்பாளர் மனு நிராகரிப்பு
பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல நடிகை- பிரபல நடிகரின் மனைவிக்கே இப்படி ஒரு நிலைமையா?
விஜய், அஜித் எப்படிபட்டவர்கள், விஜய் 61, விவேகம் படத்தில் தன்னுடைய வேடம்- மனம் திறந்து பேசிய காஜல் அகர்வால்
அஜித்தின் ரீமேக் படத்திற்காக அதிரடி திட்டம் போட்ட திரையரங்கம்
சசிகுமாருக்கு வில்லனாக பிரபல ஹீரோ?
25 கோடி சம்பளம் வாங்கும் அஜித் ஒரு படத்துக்கு 2500ரூபாய் வாங்கிய கதை தெரியுமா?
ஜி.வி. பிரகாஷ் நடித்திருக்கும் புரூஸ் லீ முதல் நாள் பிரம்மாண்ட வசூல்
உங்கள் பேவரட் நடிகர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் எது தெரியுமா!
அஜித்தின் நெருங்கிய நண்பர் விபத்தில் மரணம்- அதிர்ச்சி தகவல்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions