தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளியாகும் சைத்தான்!

Bookmark and Share

தியேட்டர் ரிலீஸுக்கு முன்பே ஆன்லைனில் வெளியாகும் சைத்தான்!

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான். இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.

முன்னதாக இப்படம் நவம்பர் 17-ல் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கரன்ஸி நோட்டு பிரச்சனையால் தற்போது இப்படம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது. எனினும் ஏற்கனவே சொன்ன தேதியில் இப்படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சியை இணையத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் கூட்டுமாம்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions