இதுதான் சைத்தான் கதை – ரகசியம் சொன்ன இயக்குனர்

Bookmark and Share

இதுதான் சைத்தான் கதை – ரகசியம் சொன்ன இயக்குனர்

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான். இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.முன்னதாக இப்படம் நவம்பர் 17-ல் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கரன்ஸி நோட்டு பிரச்சனையால் தற்போது இப்படம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் கதை மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா எழுதி 1992-ல் வெளிவந்த ‘ஆ’ என்ற நாவலில் இருந்து எடுக்கப்பட்டதுதான் என இயக்குனர் பிரதி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார். மேலும் இதற்காக சுஜாதாவின் மனைவியிடம் இவர் முறைப்படி அனுமதி வாங்கியுள்ளாராம்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions