பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’

Bookmark and Share

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு தீர்வாக உருவாகிவரும் ‘சைவ கோமாளி’

‘கில்லி’, ‘குருவி’, ‘தூள்’ படங்களை இயக்கிய இயக்குனர் தரணி, ‘புதிய கீதம்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஜெகன், ‘வேட்டைக்காரன்’ படத்தை இயக்கிய பாபு சிவன், ‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றிய சுரேஷ் சீதாராம் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்

.இப்படத்திற்கு ‘சைவ கோமாளி’ என்று வித்தியாசமான தலைப்பு வைத்துள்ளனர். காமெடி திரில்லருடன் உருவாகி வரும இப்படத்தில் புதுமுக நடிகர் ரஞ்சித், நான் கடவுள் ராஜேந்திரன், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ராஜ்குமார், பவர் ஸ்டார் சீனிவாசன், ஜி.எம்.குமார், டி.பி.கஜேந்திரன், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு சைகோவும், ஒரு கோமாளியும் இருக்கிறான். அவன் எப்படி தன்னை வெளிப்படுத்துவான் என்பது இந்த சமூகம் அவனை எதிர்கொள்கின்ற முறையில்தான் இருக்கிறது என்ற கருத்தையும், இன்றைய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளையும், அதை தடுத்து நிறுத்துவதற்கான தீர்வையும் இந்த படத்திற்கான திரைக்கதையாக அமைத்திருக்கிறேன் என்றார். 

சமீபத்தில் இப்படத்தில் 108 ஆம்புலன்சின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கும் ‘ஆம்புலன்ஸ் சத்தம் கேட்டா ஒதுங்கு, யம்மா ஹாஸ்பிட்டல் வந்துடுச்சு இறங்கு’ என்ற பாடல் காட்சியை ஈசிஆர் சாலை, பல்லாவரம், பம்மல், கீழுர், மணப்பாக்கம் போன்ற பகுதிகளில் குத்துப்பாட்டாக படமாக்கியிருக்கிறார்கள்.இந்த குத்துப்பாட்டில் 108 ஆம்புலன்சின் கம்பவுண்டராக நான் கடவுள் ராஜேந்திரன் நடித்துள்ளார்.

டிரைவராக ராஜ்குமாரும், முதலுதவி மருத்துவராக நடிகை ரெஹானாவும் ஆடிப்பாடி நடித்திருக்கிறார்கள். இந்த பாடலை கானா பாலா எழுதி, பாடியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார்.மேலும், இப்படத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக நடிக்கிறாராம்.

கிரிமினல் மினிஸ்டராக ஜி.எம்.குமார் நடித்துள்ளார். சைக்கோ வேடத்தில் நாயகன் ரஞ்சித் நடித்துள்ளார். படத்திற்கு கே.பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ்.எம்.எஸ். மூவிஸ் நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் இணைந்து தயாரித்துள்ளனர். 

 


Post your comment





Related News
தெலுங்கு பேச உள்ள சைவம்
தெலுங்கு-இந்தியில் தயாராகும் சைவம்
மறுபடியும் ரீமேக் படத்தை இயக்கும் விஜய்
‘சைவம்’ படத்தில் நடிக்கும் ஸ்டெம்செல் விஞ்ஞானி..!
\'சைவம்\' படத்தை விலைக்கு வாங்கிய உதயநிதி..!
விஜய்யின் ‘சைவம்’ படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகன்..!
ஏ.எல்.விஜய் இயக்கும் \'சைவம்\'..!
விருதை குறி வைத்து மீண்டும் குழந்தை சாராவை இயக்கும் ஏ.எல் விஜய்.







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions