நாம் நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லையே என நான் நொந்து கொண்டிருந்தேன்- சகாயம் பேட்டி!

Bookmark and Share

நாம் நாட்டில் நல்ல தலைவர்கள் இல்லையே என நான் நொந்து கொண்டிருந்தேன்- சகாயம் பேட்டி!

சு.சி.ஈஸ்வர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ‘இணைய தலைமுறை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சகாயம் ஐ.ஏ.எஸ் கலந்துகொண்டார்.

மேலும் அவ்விழாவில் பேசிய சகாயம், “ நம் நம்பி இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் தேசத்தின் மேம்பாட்டிற்கு பாடுபடுவார்கள் என்று எண்ணி இவர்களுக்கு நாம் ஆதரவு தருகிறோம்.

ஆனால் அவர்கள் தங்களை வளப்படுத்திக் கொள்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட நிலையில் 2006ம் ஆண்டு தேர்தலில் கணினி துறையைச் சேர்ந்த சில இளைஞர்கள் அரசியலில் நின்றார்கள். அப்படித்தான் எனக்கு மாறனைத் தெரியும்’ என படத்தின் தயாரிப்பாளர் மாறனை நினைவுக் கூர்ந்து பேசத் துவங்கினார் சகாயம்.

‘நம் சமூகத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், நல்ல படைப்பாளிகள், கலைஞர்கள் என பலரும் இருக்கிறார்கள் ஆனால் நல்ல தலைவர்கள் இல்லையே என நான் நொந்துகொண்டிருந்தேன். அப்போது எழுந்த இளைஞர்கள் கூட்டம் தான் இந்த மாறனுடையது. மாணவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். மாணவர்களிடம் குறும்பு இருக்கும்.

கல்வி எப்படி வணிக வளமாக மாறியுள்ளது என்பதை காட்டுகிறது. நம் கனவுகளை நம் பிள்ளைகளின் மீது திணிப்பதும், அப்படிப்பட்ட சூழலை மாற்றக்கூடிய படமாகவும், கல்வியை வணிகமாக இருக்கும் இக்கால நிலையை நான் ஆதரிக்க மாட்டேன் என்கிற வகையில் ’அப்பா’ படமும் வெற்றியடைய வாழ்த்துகள்.

தங்கர் பச்சான், நினைப்பதை அப்படியே பேசிவிடுவார். அதனால் சிலரின் கசப்புகளை எதிர்கொள்வார். நான் அதிகம் படம் பார்ப்பதில்லை. அழகி படம் பார்த்து நான் பிரமித்துப் போனேன்.

இதை விட அழகாக நம் மண்ணின் வாசனையை வெளிப்படுதும் படமில்லை. அரசியல் விழிப்புணர்வுப் படங்களை செல்வமணி எடுத்துள்ளார். இப்படிப்பட்ட கலைஞர்களை நாம் ஆதரிப்போம். எனக் கூறி சகாயம் பேசி முடித்தார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions