தன் பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் சக்தி

Bookmark and Share

தன் பெயரை மாற்றிக் கொண்ட நடிகர் சக்தி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நாயகனாக உருவெடுத்தவர் சக்தி. இவர் இயக்குனர் பி.வாசுவின் மகன். இவர் நாயகனாக நடித்த ‘தொட்டால் பூ மலரும்’, ‘மகேஷ் சரண்யா மற்றும் பலர்’, ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஆட்ட நாயகன்’ உள்ளிட்ட பல படங்கள் பெரிய அளவில் வெற்றியடையாவிட்டாலும், தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹீரோவாகவே வலம் வந்தார்.

இவர் தற்போது ‘படம் பேசும்’, ‘தற்காப்பு’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதில், ‘தற்காப்பு’ படத்தில் இருந்து தனது பெயரை சக்திவேல் வாசு என்று மாற்றி வைத்துள்ளார். மேலும், இப்படத்தில் இவருடன் சமுத்திரகனியும் ஒரு புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 

இப்படத்தை ஆர்.பி.ரவி இயக்குகிறார். பைசல் இசையமைக்கிறார். ஜோன்ஸ் ஆனந்த் ஒளிப்பதிவையும் ஷான் லோகேஷ் எடிட்டிங்கையும் கவனிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அடுத்தமாதம் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தை ‘க்னைடோஸ்கோப் நிறுவனம் சார்பாக செல்வமுத்து, மஞ்சுநாத் இணைந்து தயாரிக்கிறார்கள். மேலும், பழனி, முருகேசன் ஆகியோரும் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். 


Post your comment





Related News
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
சக்தி வாசுவுக்கு ஜோடியான பிரிட்டிஷ் இந்திய அழகி
கலையரசனுக்கு 'எய்தவன்' பேசக்கூடிய படமாக அமையும்: இயக்குனர் நம்பிக்கை
ரசிகர்களுக்கு எய்தவன் படக்குழுவினரின் ஓணம் மற்றும் பக்ரீத் வாழ்த்துக்கள்!
கன்னட படம் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் சக்தி வாசு!
மீண்டும் ஒரு சின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி!
உறுமீன் வெற்றி நடைபோடுகிறது: சக்திவேல் பெருமாள்சாமி பேட்டி
மாசிடோனியாவிற்குள் தமிழ் நடிகரை அனுமதிக்காத அதிகாரிகள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions