கன்னட படம் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் சக்தி வாசு!

Bookmark and Share

கன்னட படம் வெற்றியால் உற்சாகத்தில் இருக்கும் சக்தி வாசு!

‘சின்னத்தம்பி’, ‘ரிக்‌ஷா மாமா’, ‘செந்தமிழ் பாட்டு’ உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் சக்தி வாசு. பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ் குமாருடன் சக்தி வாசு இணைந்து நடித்த ‘சிவலிங்கா’ கன்னட படம் பல திரையரங்குகளில் 100 நாட்களை தாண்டி வெற்றிகரமாக ஓடுகின்றது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனி திறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப்பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. 

சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும் ரசிப்பதற்கு ஏற்றவாறு ஜனரஞ்சகமான முறையில் எடுக்கவுள்ளனர். சிவலிங்காவின் தமிழ் பதிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸும் சக்தி வாசுவும் நடிக்கின்றார்கள். மேலும் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது. 

தற்போது ‘7 நாட்கள்’, ‘துரியோதனா’ என 2 தமிழ் படங்களிலும் பெயரிடப்படாத மலையாளப் படத்திலும் சக்தி வாசு நடித்து வருகிறார்.


Post your comment





Related News
ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
ரஜினி, ஜக்கி வாசுதேவை கிழித்து தொங்கவிடும் பிரகாஷ்ராஜ், என்ன இப்படி சொல்றாரு!
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
எப்படி இருந்த தல பட நாயகி இப்படி ஆகிட்டாரா? - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்.!
ஆசிரியர்களை கவுரவப்படுத்தும் `பள்ளிப் பருவத்திலே' - வாசுதேவ் பாஸ்கர்
தனுஷ் படம் அவ்வளவு தானா? ரசிகர்கள் வருத்தம்
துருவ நட்சத்திரம் இப்படி ஆகிவிட்டதே?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions