கேமராமேன் எஸ்.சக்திவேலை பாராட்டிய பிரசாந்த்

Bookmark and Share

கேமராமேன் எஸ்.சக்திவேலை பாராட்டிய பிரசாந்த்

பிரசாந்த் நடித்த மலையூர் மம்பட்டியான் படத்தில் இடம்பெற்ற காட்டுவழிப் போற பெண்ணே கவலைப்படாதே -என்ற புரோமோ சாங் பாடலை ஒளிப்பதிவு செய்தவர் கேமராமேன் எஸ்.சக்திவேல். அந்த படம் வெளியான நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டார்.

அதையடுத்து 500க்கும் மேற்பட்ட விளம்பர படங்களுக்கும், ‘செம ரகளை’ உள்பட சில படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்போது பாக்யராஜ்-பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் அய்யனார் வீதி என்ற படத்துக்கு ஒளிப்பதிவு அமைத்துவருகிறார்.

இந்த படத்தில் தான் பணியாற்றியிருப்பதை பற்றி சக்திவேல் கூறுகையில், “கிராமத்து கதையில் உருவாகும் இந்த படத்தில் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வகையில் படமாக்கியிருக்கிறேன்.

குறிப்பாக, ராஜபாளையம் அருகில் சொக்கம்பட்டி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறேன். 20 அடி உயரத்தில் அய்யனார் செட் போடப்பட்டு, அய்யனார் வேட்டைக்கு செல்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

சுமார் 5 லட்சம் மக்கள் அந்த திருவிழாவில் கூடிய நாளில் இந்த காட்சியை நாங்கள் தத்ரூபமாக படமாக்கினோம். தனால் இந்த படம் தமிழ் சினிமாவில் எனக்கு நல்லதொரு திருப்புமுனை படமாக அமையும்” என்று தான் எதிர்பார்ப்பதாக சொல்கிறார் கேமராமேன் சக்திவேல்.

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டனிடத்தில் உதவி கேமராமேனாக பல படங்களில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions