நடிகர்களுக்குள் எந்தவித வேறுபாடு இருக்ககூடாது : சி.ஐ.டி. சகுந்தலா

Bookmark and Share

நடிகர்களுக்குள் எந்தவித வேறுபாடு இருக்ககூடாது : சி.ஐ.டி. சகுந்தலா

பழம்பெரும் சினிமா நடிகை சி.ஐ.டி. சகுந்தலாவுக்கு ஈரோடு கவிதாலயம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்துகொள்வதற்காக ஈரோடு வந்த நடிகை சி.ஐ.டி. சகுந்தலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன் படத்தில் இருந்து முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளேன். தற்போது நான் நடித்து உள்ள சண்டை, அந்த 60 நாட்கள் ஆகிய படங்கள் திரைக்கு வர உள்ளன. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு 2 அணியினர் போட்டியிடுகின்றனர்.

ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால் யார் மீதும் தவறு சொல்ல முடியாது. யார் தேர்தலில் வெற்றி பெற்றாலும் நல்லதுதான் செய்வார்கள். நடிகர்களுக்கு இடையே எந்தவித பிளவும் ஏற்பட்டுவிடக்கூடாது. தேர்தல் என்பது சுதந்திரமானது. நடிகர்கள் இரு அணிகளாக பிரிந்து செயல்படுவதால் பாதிக்கப்படுபவர்கள் நடிகர்-நடிகைகள்தான். எனக்கு அரசியலில் ஈடுபாடு கிடையாது. நடிகையாக மட்டும் இருப்பதால் அதற்கு சம்பந்தமும் இல்லை.

நடிகையான ஜெயலலிதா, முதல்-அமைச்சராக இருப்பதில் எங்களுக்கு பெருமையாக உள்ளது. தற்போது வரும் படங்களில் பெரும்பாலும் தொழில்நுட்பங்களுக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டால் படம் சிறப்பாக இருக்கும். இளம் நடிகைகள் திறமை வாய்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் கவர்ச்சியாக நடிப்பதால் அனைத்து தரப்பினரும் விரும்புவதில்லை.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions