குப்பை மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் சாலையோரம்

Bookmark and Share

குப்பை மனிதர்களின் வாழ்க்கையை சொல்லும் சாலையோரம்

பி.வாசுவின் உதவியாளர் க.மூர்த்தி கண்ணன் இயக்கி உள்ள படம் சாலையோரம். இதில் ராஜ், செரீனா, என்ற புதுமுகங்கள் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர். பாண்டியராஜன் வில்லனாக நடித்துள்ளார்.

சிங்கம்புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர் காமெடியனாக நடித்துள்ளனர். "நாம் தினமும் சாலையில் நடந்து செல்லும்போது நாம் சென்று சேர வேண்டிய இடம். எதிரே வரும் வாகனங்கள் இவற்றைத்தான் கவனிக்கிறோம்.

ஆனால் சாலையையே உலகமாக கொண்டு ஒரு சமூகமே வாழ்ந்து கொண்டிருக்கிறது. சென்னை புறநகரில் மிகப்பெரிய குப்பை கிடங்கு உள்ளது. நாம் வேண்டாம் என்று தூக்கி எறிகிற பொருளை சேகரித்து ஒரு சமூகம் வாழ்கிறது. அவர்களின் வாழ்க்கையை காட்டும் படம்தான் இது.

குப்பை மேட்டில் வாழும் ஹீரோ அந்த மக்களின் வாழ்க்கை தரம் உயர பாடுபடுகிறான். அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்யும் ஹீரோயின் அவரை காதலிக்கிறார்.  குப்பை மேட்டுக்கும், கோபுரத்துக்குமான காதல் வழியாக ஒரு புறக்கணிக்கப்பட்ட சமுதாய மக்களைப் பற்றி சிந்திக்க வைக்கிறோம்.

இதில் நாயகியாக நடிக்கும் செரீனா பெரும் பணக்கார வீட்டு பெண். ஆனாலும் எங்களுக்காக குப்பை மேட்டில் 20 நாட்கள் நடித்துக் கொடுத்தார்" என்கிறார் இயக்குனர் மூர்த்தி கண்ணன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions