500 நாள் ஓடி வரலாற்று சாதனை படைத்த துளு மொழி திரைப்படம்!

Bookmark and Share

500 நாள் ஓடி வரலாற்று சாதனை படைத்த துளு மொழி திரைப்படம்!

கர்நாடகாவின் மங்களூரில் ‘சாலி பொலிலு’ என்ற துளு மொழி திரைப்படம் திரையரங்கில் இன்று 500வது நாளாக ஓடி வரலாற்று சாதனை படைத்துள்ளது. நகைச்சுவை நிறைந்த இந்த படத்தை வீரேந்திர ஷெட்டி கவூர் இயக்கியுள்ளார்.

ஜெய கிரண பிலிம்ஸ் பேனரில் பிரகாஷ் பாண்டேஷ்வர் தயாரித்துள்ளார். திரையரங்கில் தொடர்ந்து ஓடி கொண்டிருக்கும் இத்திரைப்படம் பற்றி நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய தயாரிப்பாளர் பாண்டேஸ்வர், இதற்கு முன்பு 5 திரையரங்குகளில் 75 நாட்கள் ஓடி இந்த படம் சாதனை படைத்துள்ளது. அதே போன்று 3 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியுள்ளது.

மொழிவாரி திரைப்படத்திற்காக 500வது நாள் கொண்டாட்டம் திரையரங்கு ஒன்றில் நடைபெறுவது என்பது ஒரு சாதனை என கூறியுள்ளார். உடன் இருந்த துளு நடிகர் தேவ்தாஸ் கபிகாடு கூறும்பொழுது, துளு திரைப்பட துறையில் இந்த படம் மேஜிக் புரிந்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசிகர்களை ஈர்த்துள்ளது என கூறியுள்ளார்.

இத்திரைப்படம் 500வது நாளில் 55 சதவீத ரசிகர்களுடன் திரையரங்கில் ஓடியுள்ளது. கர்நாடகாவில் இதுவரை வேறு எந்த படமும் 500 நாள் ஓடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி! எத்தனை கோடி தெரியுமா?
பிரபல கவர்ச்சி நடிகை திடிர் தற்கொலை - என்ன ஆனது?
இந்த இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ 10 ஆயிரம் பரிசு
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரை அடித்து விரட்டிய பொதுமக்கள்- ஏன் தெரியுமா?
டான்ஸ் மாஸ்டர் சாண்டி கதாநாயகன் ஆனார்
நாம் ஏன் ஆஸ்கர் விருதை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்?- பிரபல இயக்குநர் பேட்டி!
மிஸ்டர் இந்திய மினி வில்லன் இப்போது மோகன்லாலின் வலதுகை
விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர பயப்படும் நடிகைகள்!
விஜய் ஆண்டனியின் டாக்டர் சலீம்
ஒரே வாரத்தில் தியேட்டர்களில் இருந்து தன் படத்தை திரும்ப பெற்றார் சலீம்குமார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions