பிச்சைக்காரனைத் தொடர்ந்து சலீம்-2ம் பாகம்?

Bookmark and Share

பிச்சைக்காரனைத் தொடர்ந்து சலீம்-2ம் பாகம்?

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இதுவரை நான், சலீம் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதில் நான் படத்தில் தொடர்ச்சியாகத்தான் சலீம் படத்தின் கேரக்டர் உருவாக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதையடுத்து இந்தியா பாகிஸ்தான் என்றொரு கணவன் மனைவி பிரச்சினையை சொல்லும் கதையில் தற்போது நடித்திருக்கிறார். இப்படம் சில மாதங்களுக்கு முன்பே அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி விட்டது.

ஆனால், பெரிய அளவில் போட்டி இல்லாத நேரத்தில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக நாட்களை கடத்திக்கொண்டே வரும் விஜய் ஆண்டனி, இப்போது ஏப்ரல் மாதத்தில் உத்தமவில்லன் வந்த பிறகு இந்தியா பாகிஸ்தானை வெளியிட முடிவெடுத்து விட்டார்.

மேலும், தற்போது சசி இயக்கத்தில் பிச்சைக்காரன் என்ற படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, அடுத்த மாதத்தோடு அந்த படத்தில் நடித்து முடித்து விடுவார். அதனால் அதையடுத்து அவர் ஏற்கனவே கதை கேட்டு வைத்திருக்கும் திருடன், சைத்தான் படங்களில் நடிப்பதாகத்தான் இதுவரை செய்தி வெளியானது.

ஆனால், அவர் பிச்சைக்காரனுக்கு பிறகு சலீம் படத்தில் தொடர்ச்சியான ஒரு கதையில்தான் நடிக்கப்போகிறாராம். அதற்கான கதை ஓகேவாகி விட்டதாம். சலீம் படத்தில் என்ட் கார்டு போடும்போது சலீம்-2 தொடரும் என்று கார்டு போட்ட விஜய்ஆண்டனி, அந்த படத்துக்கு சலீம்2 என்றுகூட பெயர் வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
இந்தியன் 2 படத்தில் நடிக்க சிம்புடன் பேச்சுவார்த்தை
ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
எந்திரன் 3.0 வருமா? - இயக்குநர் ஷங்கர் பதில்
லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
2.0 படக்குழுவின் அடுத்த அறிவிப்பு - நாளை சிறப்பு விருந்து
என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி - பிக்பாஸ் வெற்றியாளர் ரித்விகா
கூத்தன் படம் பார்ப்பவர்களுக்கு 18 பவுன் தங்கம்: அசரடிக்கும் தயாரிப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions