தெலுங்கில் வெங்கடேஷை இயக்கும் சலீம் பட இயக்குனர்

Bookmark and Share

தெலுங்கில் வெங்கடேஷை இயக்கும் சலீம் பட இயக்குனர்

பிக் பாங்க் கொரிய திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட படம், விஜய் ஆண்டனி நடித்த சலீம். நிர்மல் குமார் சலீமை இயக்கியிருந்தார். பிக் பாங்க் படத்திலிருந்து சலீம் படத்தின் இரண்டாம் பகுதி மட்டும் மாறுபட்டிருக்கும்.

அதுதான் சலீமை தனித்துவமாக காட்டியது. சலீம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வெங்கடேஷ் ஆர்வம் காட்டியதுடன் அதன் ரீமேக் ரைட்ஸை வாங்கவும் முயற்சி செய்தார்.

ஆனால் விஜய் ஆண்டனிக்கு சலீமை தெலுங்கில் டப் செய்து வெளியிட ஆசை. அதனால் வெங்கடேஷின் ஆசை நிராசையானது. ஆனாலும், நிர்மல் குமாரை அவர் விடுவதாக இல்லை. 

நிர்மல் குமாரும் தெலுங்கின் முன்னணி கதாசிரியர் ஒருவரும் இணைந்து கதை ஒன்றை தயார் செய்துள்ளனர். வெங்கடேஷுக்காக பிரத்யேகமாக தயாரான இந்த கதையை நிர்மல் குமார் தெலுங்கில் இயக்குகிறார். படம் குறித்த அதிகபடி தகவல்களை விரைவில் அவர்களே அறிவிக்க உள்ளனர்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions