சல்மான் கானின் சுல்தான் படத்துக்கு ரூ.320 கோடி வசூல்!

Bookmark and Share

சல்மான் கானின் சுல்தான் படத்துக்கு ரூ.320 கோடி வசூல்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் - அனுஷ்கா ஷர்மா ஜோடியாக நடித்த ‘சுல்தான்’ திரைப்படம் கடந்த 6-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தியாவில் மட்டும் சுமார் ஐயாயிரம் திரையரங்குகளில் வெளியான ‘சுல்தான்’ முதல்நாள் டிக்கெட் விற்பனையின் மூலம் மட்டும் சுமார் 40 கோடி ரூபாயை வசூலித்தது.

ரிலீசான மூன்று நாட்களில் நாடு முழுவதும் 106 கோடி ரூபாயை வசூலித்த இந்தப்படம் ஷாருக் கானின் ‘ஹேப்பி நியூ இயர்’, ‘ஃபேன்’ மற்றும் சல்மான் கானின் ‘பிரேம் ரடன் தன் பாயோ’ ஆகிய படங்களின் முந்தைய வசூல் சாதனையை முறியடித்தது.

இந்நிலையில், நான்காம் நாளான கடந்த சனிக்கிழமை நிலவரப்படி ஒரேநாளில் சுமார் 36 கோடி ரூபாயை ‘சுல்தான்’ அள்ளியுள்ளது. நான்கு நாட்களில் 142 கோடியே 62 லட்சம் ரூபாயை சம்பாதித்ததன்மூலம், ‘ஹவுஸ் புல்’ (ரூ.107 கோடி), ‘ஏர்லிப்ட்’ (ரூ.127 கோடி) ஆகிய இந்த ஆண்டின் பாலிவுட் வசூல் சாதனைகளை ‘சுல்தான்’ முறியடித்தது. 

மேலும், ரம்ஜான் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 320 கோடி ரூபாயை சுல்தான் வசூலித்துள்ளதாக தெரியவந்துள்ளது. உள்நாட்டு திரையரங்குகளில் 262 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் கடந்த வெள்ளிக்கிழமைவரை இந்தப் படம் 58 கோடி ரூபாயும் வசூலித்துள்ளதாக வினியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions