பிரபலங்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடம்

Bookmark and Share

பிரபலங்கள் பட்டியலில் சல்மான்கான் முதலிடம்

போர்ப்ஸ் இந்தியா பத்திரிகை, 2015 அக்டோபர் முதல் 2016 செப்டம்பர் வரையிலான காலத்தில் கிடைத்த வருமானம் மற்றும் புகழ் ஆகிய அம்சங்களின் அடிப்படையில் 100 இந்திய பிரபலங்கள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில், வருவாய் அடிப்படையில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார். இவரது வருவாய் ரூ.270 கோடியாக இருக்கிறது.

இதனையடுத்து முதலிடத்தில் இருந்த ஷாருக்கான் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார்.

ஷாருக்கானின் வருவாய் ரூ.222 கோடி ஆகும். எனினும், ‘புகழ்’ அடிப்படையில் பார்க்கும்போது சல்மான்கான் இரண்டாவது இடத்திலும், ஷாருக்கான் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். முதலிடத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி இருக்கிறார்.


போர்ப்ஸ் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் 4-வது இடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் ரூ.203 கோடியாக உள்ளது. கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி வருவாய் அடிப்படையில் ஐந்தாவது இடத்திலும், புகழ் அடிப்படையில் 4-வது இடத்திலும் இருக்கிறார்.

போர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ள 100 பிரபலங்களின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.2,745 கோடியாக உள்ளது. இதில், சல்மான் கான் ஈட்டிய வருமானத்தின் பங்கு 9.84 சதவீதமாகும். 


Post your comment





Related News
நான் பத்திரிகையாளராக இருந்தால் சல்மானை பார்த்து 'அந்த' கேள்வியை கேட்பேன்: லேடி ரஜினி
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
ஒரே நாளில் அஜித், முருகதாஸ், சல்மான் கான்- சூப்பர் ஸ்பெஷல்
நான் சுடவில்லை, மான் அதுவா செத்துப்போச்சு: கோர்ட்டை அதிர வைத்த சல்மான் கான்
மான் வேட்டை வழக்கு: நேரில் ஆஜராவதில் இருந்து சல்மான் கானுக்கு விலக்கு
சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி
பிரபல நடிகைகளுடன் கூட்டணி அமைக்கும் துல்கர் சல்மான், ரசிகர்கள் உற்சாகம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions