தலைக்கு மேல் கத்திகளாக தொங்குகின்றன: சல்மான் கான் வேதனை

Bookmark and Share

தலைக்கு மேல் கத்திகளாக தொங்குகின்றன: சல்மான் கான் வேதனை

கார் மோதி ஒருவர் இறந்த வழக்கு, மானை வேட்டையாடியது மற்றும் அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கு ஆகியவற்றின் தீர்ப்புகள் தனது தலைக்கு மேல் கத்திகளாக தொங்கிக் கொண்டிருப்பதாக பாலிவுட் நடிகர் சல்மான் கான் வேதனை வெளியிட்டுள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சல்மான் கான் கூறியதாவது:- 

என் மீதான இரு வழக்குகளும் தற்போது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இல்லை. ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஐந்தைந்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே போனாலும் இவற்றில் தீர்ப்பு கிடைக்க 10-15 ஆண்டுகள் ஆகிவிடும் போல் தோன்றுகிறது. 

இது என் தலையிலும் என் பெற்றோர் தலையிலும் பெரிய வேதனையாக இருந்து வருகிறது. எங்கள் தலைக்கு மேலே கத்தி தொங்கிக் கொண்டுள்ள நிலையில் நான் சினிமாவில் காமெடி காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்த வேண்டியுள்ளது. 

என் தொழிலை பொருத்தவரை நீங்கள் எவ்வளவு நல்லது செய்தாலும், "அவனைப்பார் கோர்ட்டில் வழக்குகள் உள்ளன. இருந்தாலும், சோனம் கபூரோடு காதல் காட்சியில் நடிக்கிறான். ஜாக்குலின் பெர்னான்டஸ் உடன் டான்ஸ் ஆடுறான். ஷூட்டிங்குக்காக போலந்து நாட்டுக்கு போறான். 600 கோடி ரூபாய் சம்பாதிக்கிறான்" என்று ஈவிரக்கமில்லாமல் சிலர் பேசுகிறார்கள். 

இதுவெல்லாம், முற்றிலுமாக எனக்கு எதிராக அமைந்துள்ளது. எங்கள் கையில் மிச்சமாக என்ன இருக்கிறது? என்று யாருமே பார்ப்பதில்லை. என்னுடைய நல்ல செயல்கள் எதுவுமே எடுபடாமல் போய்விடுகின்றது.  இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions