நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம்!

Bookmark and Share

நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம்!

பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. வெளிநாட்டு காதலி லூலியாவை மணக்கிறார். இந்திப் பட உலகின் முன்னணி கதாநாயகனாக இருக்கும் சல்மான்கானுக்கு 50 வயதாகிறது.

இன்னும் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. கடந்த காலங்களில் ஐஸ்வர்யாராய், கத்ரினா கைப், ஜாக்குலின் பெர்னாண்டஸ், சங்கீதா பிஜ்லானி உள்ளிட்ட பல இந்தி நடிகைகளுடன் இணைத்து பேசப்பட்டார். அந்த காதல்கள் எல்லாம் இறுதியில் தோல்வியில் முடிந்தன.

சல்மான்கானுக்கும் ருமேனிய அழகி லூலியாவுக்கும் திடீர் நட்பு ஏற்பட்டு பின்னர் அது காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதலை வளர்த்தனர். நண்பர்களிடம் லூலியா தனது தோழி என்று சல்மான் கான் கூறிவந்தார்.

சமீபத்தில் சல்மான்கான், பிறந்த நாளை கொண்டாடியபோது லூலியாவும் மும்பை வந்திருந்தார். இந்தி நடிகர்–நடிகைகள், தொழில் அதிபர்கள் பலர் அதில் கலந்து கொண்டனர். அப்போது சல்மான்கான் பிறந்தநாள் கேக்கை வெட்டி லூலியாவுக்கு ஊட்டினார்.

இது இருவருக்கும் இருந்த காதலின் நெருக்கத்தை அம்பலப்படுத்தியது. மும்பையில் உள்ள பண்ணை வீட்டில் சல்மான்கான் புத்தாண்டை கொண்டாடியபோது அதிலும் லூலியா கலந்து கொண்டார்.

அங்கிருந்த குதிரையில் சவாரி செய்து பண்ணையையும் சுற்றியும் வந்தார். அந்த படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதைதொடர்ந்து, இன்னும் இரண்டு மாதத்தில் இருவருக்கும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

திருமண நிச்சயதார்த்தத்தை ஏற்கனவே ரகசியமாக நடத்தி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. குடிபோதையில் காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தி சாலையோரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் சாக காரணமாக இருந்ததாக சல்மான்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

3 வருடமாக நடந்த இந்த வழக்கில் இருந்து சமீபத்தில் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்தே அவரது திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடப்பதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions