'சல்மான்கான்' கார் விபத்து வழக்கில் நாளை தீர்ப்பு

Bookmark and Share

'சல்மான்கான்' கார் விபத்து வழக்கில் நாளை தீர்ப்பு

இந்தி நடிகர் சல்மான்கான் மீதான கார் விபத்து வழக்கில் நாளை தீர்ப்பு வெளியாகும் நிலையில் அவரை நம்பி சினிமா தயாரிப்பாளர்கள் ரூ.200 கோடி முதலீடு செய்து உள்ளனர்.             

இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பர் 28-ந் தேதி நள்ளிரவு மும்பை பாந்திராவில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்தில் ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குற்றச்சாட்டில் அவருக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கக்கூடிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு, மும்பை செசன்சு கோர்ட்டில் விசாரணை முடிவடைந்தது. 12 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணை நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் நாளை (6-ந் தேதி) தீர்ப்பு வெளியாகிறது. ஆனாலும், நடிகர் சல்மான்கானுக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சல்மான்கான், நடிகை கரீனா கபூர் ஜோடி சேர்ந்துள்ள ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ என்ற படமும், சோனம் கபூருடன் இணைந்து நடித்துள்ள ‘பிரேம் ரத்தான் தான் பாயோ’ என்ற திரைப்படமும் இறுதிகட்டத்தை நெருங்கி விரைவில் திரைக்கு வர இருக்கின்றன. ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்தில் நடந்தது.         
இது தவிர, ‘தாபங்-3’ மற்றும் ‘என்ட்ரி மெய்ன் நோ என்ட்ரி’ உள்ளிட்ட மேலும் 4 படங்களில் 49 வயது நடிகர் சல்மான்கான் ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனாலும், அந்த படங்களின் படப்பிடிப்பு இன்னமும் தொடங்கவில்லை.           

ஒட்டுமொத்தமாக, தற்போது சல்மான்கானை நம்பி ரூ.200கோடி வரை இந்தி திரைப்பட தயாரிப்பாளர்கள் முதலீடு செய்திருக்கின்றனர். மேலும், அவர் மீதான விபத்து வழக்கில் பயப்படுகிற அளவுக்கு ஒன்றும் நடக்காது என்றும் அவர்கள் நம்புவதாக வர்த்தக ஆய்வாளர் கோமல் நஹ்தா தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே, கடந்த 1999-ம் ஆண்டு ‘ஹும் சாத் சாத் ஹெய்ன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தபோது, சல்மான்கான் மான் வேட்டையாடியதாக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில கோர்ட்டில் விசாரணை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.   


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions