மும்பை நகரின் நெருக்கடியான சாலையில் சைக்கிளில் ஜாலியாக வலம்வந்த சல்மான்கான்

Bookmark and Share

மும்பை நகரின் நெருக்கடியான சாலையில் சைக்கிளில் ஜாலியாக வலம்வந்த சல்மான்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் மும்பை நகரின் மத்திய பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலையில் ஜாலியாக சைக்கிள் ஓட்டிச் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

சல்மான்கான் இதுபோல் சாலைகளில் சைக்கிள் ஓட்டிச் செல்வது ஒன்றும் புதிதல்ல. இதுபோல் பலமுறை மும்பை நகரின் மக்கள் நெருக்கடி மிகுந்த சாலைகளில் சைக்கிளில் சென்றுள்ளார்.

சல்மான் அவருடைய பேஸ்புக்கில் இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சல்மான் கான் சைக்கிள் ஓட்டிச் செல்லும்போது ஹேண்ட் பாரை பிடிக்காமல் ஓட்டிச் சென்றுள்ளார். தனக்காக பாதுகாவலர் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தனியாகவே சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார். சைக்கிளில் செல்லும்போது ஊதா நிறத்திலான டீ சர்ட்டும், வெள்ளை நிற ஷார்ட்சும், தலையில் ஒரு தொப்பியும் அணிந்துள்ளார்.

இவர் இவ்வாறு சைக்கிளில் ஜாலியாக செல்லும்போதெல்லாம் குழந்தைகள் மற்றும் தன்னுடைய ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக் கொள்வதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

படப்பிடிப்புக்கும் பெரும்பாலும் சல்மான் சைக்கிளிலேயே செல்கிறாராம். இதனால், மும்பை நகரின் வாகன நெருக்கடியில் அவருக்கு நிறைய நேரம் மிச்சமாகிறதாம்.

சல்மான்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பிரேம் ரத்தன் தான் பயோ’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்து கபீர்கான் இயக்கும் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க இருக்கிறது. 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions