ஹீரோ படத்தின் பாடலுக்கு குரல் கொடுத்த சல்மான் கான்

Bookmark and Share

ஹீரோ படத்தின் பாடலுக்கு குரல் கொடுத்த சல்மான் கான்

‘பஜ்ரங்கி பாய்ஜான்’ நாயகன் சல்மான் கான் தனது குரலில் பாடிய பாடலின் வீடியோ பதிவை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவரது தயாரிப்பில் வெளிவர இருக்கும், ‘ஹீரோ’ படத்தின் தலைப்புப் பாடலான ‘மேன் ஹூன் ஹீரோ தேரா’ என்பதைப் பாடி வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே சல்மான் கான் தனது படங்களான ‘வாண்டட்’ மற்றும் ‘கிக்’ ஆகியவற்றில் தனக்காக பாடல் பாடியுள்ளார். வேறொரு நடிகருக்காக குரல் கொடுத்திருப்பது இதுவே முதல்முறை.

கடந்த 1983-ஆம் ஆண்டு ‘ஹீரோ’ என்ற பெயரிலேயே வெளிவந்து வெற்றியடைந்த ரீமேக்காக வெளிவர இருக்கும் இந்த படத்தின் மூலம் இந்தி நடிகர் ஆதித்யா பன்சோலியின் மகன் சூரஜ்ஜும், நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆத்யாவும் அறிமுகமாக இருக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் இசை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வெளியாகும் எனவும், செப்டம்பர் 25-ஆம் தேதி படம் திரைக்கு வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions