பெயிலா? ஜெயிலா?: மும்பை ஐகோர்ட்டில் சல்மான்கான் வழக்கு இன்று விசாரணை

Bookmark and Share

பெயிலா? ஜெயிலா?: மும்பை ஐகோர்ட்டில் சல்மான்கான் வழக்கு இன்று விசாரணை

குடித்துவிட்டு கார் ஓட்டி ஒருவரை கொன்ற வழக்கில் நேற்று முன்தினம் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மும்பை செஷன்ஸ் நீதிபதி தேஷ்பாண்டே உத்தரவிட்டார். இது தவிர லைசென்ஸ் இல்லாமல் கார் ஓட்டியதற்காக 2 மாத சிறை தண்டனையும், 500 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு விபரத்தை கேட்ட சல்மான்கான் நீதிமன்றத்திலேயே மனமுடைந்து அழுத நிலையில், அன்று மாலையே மும்பை உயர்நீதிமன்றம் அவருக்கு 48 மணி நேர ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதையடுத்து சிறை செல்லாமலேயே தனது வீட்டுக்கு திரும்பினார் சல்மான்கான். இந்நிலையில் இன்று சல்மான்கான் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்குகிறது. அப்போது சல்மான்கானின் ஜாமீன் நீட்டிக்கப்படுமா அல்லது ஜாமீன் ரத்து செய்யப்படுமா என்று பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை ஜாமீன் நீட்டிக்கப்படவில்லை என்றால் சல்மான் சிறை செல்வது நிச்சயமாகிவிடும். எனவே இன்றைய தினம் சல்மானுக்கு கருப்பு வெள்ளியாக மாறுமா என்று அச்சம் எழுந்துள்ளது.

முன்னதாக கடந்த 2002–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28–ந்தேதி அதிகாலை குடித்துவிட்டு சல்மான்கான் அதிவேகமாக ஓட்டிச்சென்ற கார், பிளாட்பாரத்தின் மீது ஏறியதுடன் அங்குள்ள ஒரு பேக்கரிக்குள் புகுந்தது. இதில் பேக்கரிக்கு வெளியே பிளாட்பாரத்தில் படுத்து தூங்கிய ஒருவர் பலியானார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரை சல்மான்கான் ஓட்டியதாகவும் அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் போலீசில் தெரிவித்தனர். இது தொடர்பாக சல்மான் கான் மீது மும்பை போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி டி.டபிள்யூ தேஷ் பாண்டே, முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

13 வருடங்களாக நடைபெற்று வந்த இந்த வழக்கு கடந்த மாதம் இறுதிக்கட்டத்தை எட்டியது. இரு தரப்புக்கும் இடையே இறுதி கட்ட வாதங்கள் நடைபெற்றன. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் சல்மான் குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. 

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions