இந்தி நடிகர் சல்மான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

Bookmark and Share

இந்தி நடிகர் சல்மான்கான் மீது மேலும் ஒரு வழக்கு

பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் கடந்த 2002–ம் ஆண்டு மும்பையில் காரில் சென்றபோது அவர் கார் தாறுமாறாக ஓடி ஒருவர் பலியானார்.

சல்மான்கான் நிறைய மது குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதால், இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சல்மான்கானுக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் மேலும் ஒரு பிரச்சினையில் சிக்கியுள்ளார்.

அவர் முக்கிய ஆவணம் ஒன்றை தன்னிடம் இருந்து பறித்து சென்று விட்டதாக ரவீந்திர திவேதி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மும்பை கோர்ட்டில் அவர் சல்மான்கான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

பா.ஜ.க. தலைவர் பிரமோத் மகாஜன் கொலை தொடர்பாக நான் ஒரு ஆவணத்தொகுப்பு தயாரித்திருந்தேன். அதை அரசிடம் சமர்ப்பிக்க நவம்பர் மாதம் கொண்டு சென்றேன். அப்போது தன் ஆட்களுடன் வந்த சல்மான்கான் என்னை கடுமையாகத் திட்டி ஆவணத்தை பறித்து சென்று விட்டார்.

அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் மனுவில் கூறியுள்ளார்.

அந்த மனுவை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் இதுபற்றி விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சல்மான்கான் ஆவணப் பறிப்பு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 323, 392 504, 506 ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions