இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம்!

Bookmark and Share

இந்தி நடிகர் சல்மான்கானுக்கு விரைவில் திருமணம்!

இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர், சல்மான்கான். இவருக்கு 50 வயது ஆகிறது. ஆனாலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

சல்மான்கான் பேட்டி அளிக்கும் போதெல்லாம் உங்கள் திருமணம் எப்போது? என்று நிருபர்கள் கேள்வி கேட்க தவறுவது இல்லை. திருமணம் பற்றி கருத்து சொல்வதை தவிர்த்து வந்தார்.

ஏற்கனவே தன்னுடன் நடித்த 8 நடிகைகளுடன் அவர் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். ஐஸ்வர்யாராய், சங்கீதா பிஸ்லானி, சினேகா உள்ளல், கத்ரினாகைப், பாகிஸ்தான் நடிகை சோமி அலி உள்ளிட்டோர் இந்த பட்டியலில் அடக்கம். சமீப காலமாக இத்தாலியை சேர்ந்த மாடல் அழகி லூலியாவுடன் நெருக்கமாக இருந்தார்.

இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவின. திரையுலகினர் மற்றும் ரசிகர்களுக்கு தெரியாமல் ரகசியமாக சந்தித்து வந்தனர். வெளிநாடுகளில் ஜோடியாக சுற்றினார்கள். சல்மான்கான் பிறந்த நாள் விழா விருந்தில் இவர்கள் காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. இந்த விருந்தில் லூலியா கலந்து கொண்டார். தற்போது சல்மான்கானுக்கும் லூலியாவுக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திருமண தகவலை சல்மான்கானுக்கு நெருக்கமானவர்கள் உறுதி செய்துள்ளனர். வட இந்திய பத்திரிகைகள் இதனை தலைப்பு செய்தியாக வெளியிட்டுள்ளன. இன்னும் ஓரிரு மாதத்தில் இந்த திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.

சல்மான்கான் சமீபத்தில் தான் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions