1,000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு: சல்மான்கான் வரவேற்பு

Bookmark and Share

1,000, 500 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பு: சல்மான்கான் வரவேற்பு

1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு திட்டத்துக்கு நாடு முழுவதும் வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தரப்பில் பொதுமக்களை பாதிக்கும் திட்டம் என்று விமர்சனங்கள் கிளம்பி இருக்கிறது. ஆனால் நடிகர்-நடிகைகளில் பெரும்பாலானோர் பிரதமர் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், தனுஷ், உள்ளிட்ட பலர் பிரதமரை பாராட்டி டுவிட்டரில் கருத்துகள் பதிவு செய்து இருக்கிறார்கள். இந்த திட்டத்தால் இந்தியா வளர்ச்சி பெறும் என்று கூறியுள்ளனர். நடிகை தமன்னா 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி இருப்பது உண்மைதான். ஆனாலும் ஒரு நல்ல நோக்கத்துக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மக்களுக்கு நல்ல பலனை தரக்கூடியதாக மாறும் என்று கூறியுள்ளார்.

இந்தி நடிகர், நடிகைகளும் இந்த திட்டத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், விவேக் ஓபராய், அனுபம்கேர், அஜய்தேவ்கான், நடிகைகள் கரீனா கபூர், நந்திதா, ரவீனா தண்டன், பிரீத்தி ஜிந்தா, டாப்சி, அனுஷ்கா சர்மா ஆகியோர் வரவேற்று இருக்கிறார்கள். நடிகை ஐஸ்வர்யாராயும் இதனை பாராட்டி உள்ளார். அவர் கூறும்போது, “இந்த நாட்டின் பிரஜையாக பிரதமரின் 1,000, 500 ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையை வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன். இதன் மூலம் லஞ்சம், ஊழல் ஒழியும்” என்று கூறியிருக்கிறார்.

இந்தி பட உலகின் முன்னணி கதாநாயகனான சல்மான்கானும் வரவேற்று இருக்கிறார். அவர் கூறும்போது, “பிரதமர் நரேந்திரமோடியின் முயற்சியை வரவேற்கிறேன். கருப்பு பணத்தை ஒழிக்கும் இந்த நடவடிக்கையை பாராட்டுகிறேன். பிரதமர் இதனை அறிவித்தபோது நான் ஹாங்காங்கில் இருந்தேன். என்னிடம் நான்கு 1,000 ரூபாய் நோட்டுகளும், ஆறு 500 ரூபாய் நோட்டுகளும் இருக்கின்றன. அவற்றை அடுத்த சில நாட்களில் வங்கிக்கு சென்று மாற்றுவேன்” என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
உதாரு விட்ட நடிகை: ஜோடியாக நடிக்க மறுத்த சூப்பர் ஸ்டார்
ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு
ஏ.ஆர். ரஹ்மான், ஷாருக்கானை பின்னுக்கு தள்ளிய அமிதாப் பச்சன்! மாஸ் சாதனை
Raees பட பிரச்சனையால் ஷாருக்கான் மீது வழக்கு
சூர்யா, ஷாருக் பற்றிய செய்தி வெறும் வதந்தியா?
பாகுபலி-2! கவுரவ தோற்றத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார்
இது சாதரண செஃல்பி இல்லை, இதற்கு பின் ஒழிந்திருக்கும் பல வருட கதை இது தான்
மூணு நாளைக்குள்ள சிசிடிவி பதிவை மக்களிடம் காட்டு-கர்ஜிக்கும் மன்சூர் !
பார்ரா..மீண்டும் சல்மானிடமேவா?: கத்ரீனாவின் சமத்தை பார்த்து வியக்கும் பாலிவுட்
50 நாட்களை கடந்து அமிர்கானின் தங்கல் சாதனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions