சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி

Bookmark and Share

சல்மான் கானை சப்புன்னு அறைந்தேன்: சாமியார் பரபர பேட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்கும் வீட்டில் வைத்து பாலிவுட் நடிகர் சல்மான் கானை கன்னத்தில் அறைந்ததாக சாமியார் ஸ்வாமி ஓம் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியின் 10வது சீசனை நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்கள் ஒரு வீட்டில் 60 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்.

அவர்களின் செயல்கள் அனைத்தும் வீடியோ எடுக்கப்படும். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாமியார் ஸ்வாமி ஓம் வெளியேற்றப்பட்டார்.பிக் பாஸ் வீட்டில் ரகளை செய்த ஸ்வாமி ஓம் ஒரு கட்டத்தில் தனது சிறுநீரை சக போட்டியாளர்களான பானி ஜே மற்றும் ரோஹன் மெஹ்ரா மீது தெளித்தார். இதை பார்த்த சல்மான் கான் கடுப்பாகி ஸ்வாமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினார்.

அநாகரீகமாக நடந்து கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்வாமி ஓம் இந்தி செய்தி தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டின் புகைப்பிடிக்கும் அறையில் வைத்து நான் சல்மான் கானை கன்னத்தில் அறைந்தேன் என்றார்.

ஸ்வாமி ஓம் விளம்பரத்திற்காக பல பேட்டிகள் கொடுப்பவர் என பெயர் எடுத்துள்ளார். அதனால் அவர் சல்மானை அறைந்ததாக கூறுவதும் விளம்பரத்திற்கே என்று கூறப்படுகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு சல்மான் கான் தனது வீட்டில் இருந்து உணவு எடுத்து வந்துள்ளார்.

ஆனால் அதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டியாளர்களுக்கு கொடுக்கவில்லை என்பதை அறிந்த சல்மான் கோபத்தில் உள்ளாராம்.


Post your comment





Related News
இந்தியாவிலேயே அதிகம் வரி கட்டும் நடிகர், நடிகைகள் இவர்கள் தான், எத்தனை கோடி தெரியுமா?
காஷ்மீர் மாநில சுற்றுலா தூதராக ஆகிறார் சல்மான் கான்
ஷாருக்கானை போட்டோ எடுக்க வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்! புகைப்படம் உள்ளே
கார் ஏறி விபத்து: காயம் அடைந்தவரை ஆஸ்பத்திரியில் சேர்த்த ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கானின் கார் ஏறி பத்திரிகையாளர் காயம்
தங்கல் படத்தில் அமீர்கானின் சம்பளம் இத்தனை கோடியா? நம்ம ஹீரோக்கள் இதை பாலோ செய்வார்களா!
அமீர்கானின் 52-வது பிறந்தநாள்: குடும்பத்தினருடன் ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்
பிரபல தமிழ் நாயகியை பாராட்டிய பாலிவுட் நடிகர் சல்மான் கான்
பாலிவுட் நடிகர்களில் தமிழகத்தில் அமீர்கான் மட்டுமே படைத்த சாதனை
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions