ஹீரோவில் இரண்டு பாடல்கள் பாடும் சல்மான்கான்!

Bookmark and Share

ஹீரோவில் இரண்டு பாடல்கள் பாடும் சல்மான்கான்!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் இருந்து விடுதலையாகியுள்ளார். இதனால் நிம்மதி பெருமூச்சு விடும் சல்மான், மீண்டும் தன் படங்களில் பிஸியாக நடிக்க தொடங்கிவிட்டார்.

இந்தசூழலில் தன் சொந்த தயாரிப்பில், ஹீரோ என்ற படத்தை தயாரித்து வருகிறார். நிக்கில் அத்வானி இயக்கும் இப்படத்தில் சூரஜ் பஞ்சோலி, ஆதித்யா ஷெட்டி ஆகியோர் ஹீரோ-ஹீரேயின்களாக நடிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களை சல்மான் கான் பாடுகிறார். இரண்டுமே ரொமான்டிக் பாடல் தான். ஹிமேஷ் ரேஷ்மய்யா இசையமைப்பில் ஒருபாடலும், அமால் மாலிக் இசையில் ஒரு பாடலும் பாடுகிறார்.

இதில் அமால் மாலிக் இசையமைப்பில் சில தினங்களுக்கு முன்னர் தான் ஒரு பாடலை பாடியிருக்கிறார் சல்மான். இன்னொரு பாடலை காஷ்மீரில் இருந்து திரும்பி வந்ததும் பாடுகிறார் சல்மான்.  இதனிடையே இப்படத்தின் டிரைலரை விரைவில் வௌியிட படக்குழு முடிவு செய்துள்ளது. படம் ஜூலை 3ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions