எனது கருத்துகள் வெளியிடப்படுவது வருத்தம் அளிக்கிறது: சல்மான்கான்

Bookmark and Share

எனது கருத்துகள் வெளியிடப்படுவது வருத்தம் அளிக்கிறது: சல்மான்கான்

இந்தி நடிகர் சல்மான்கான் சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியபோது, இந்த படத்துக்காக மல்யுத்த காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்தேன் என்றும், இதனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணை போல் வலியை உணர்ந்ததாகவும் உவமையுடன் குறிப்பிட்டார்.

அவரது இந்த கருத்து நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால், மகளிர் ஆணையத்தின் கண்டக்கணைகளுக்கு ஆளான அவர், இதற்கு பதிலளிக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டார். பரபரப்பான இந்த சூழலில், 50 வயது நடிகர் சல்மான்கான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, சர்ச்சைக்குரிய இந்த கருத்து குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

நான் ஒன்று சொல்ல அது வேறு மாதிரி கருத்தில் கொள்ளப்படுகிறது. என்னுடைய கருத்து எவ்வாறு திரித்து வெளியிடப்பட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நான் எதுவும் பேசவில்லை என்றால், எனக்கு சலிப்பு ஏற்பட்டு விடும்.

ஆனால், நான் ஏதாவது கூறினால் என்னுடைய ரசிகர்கள் அதனை விரும்ப மாட்டார்கள். ஆகையால், நான் என்ன பேச வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். உங்கள் பொறுப்பு எனக்கு நன்றாக புரிகிறது. நான் எதுவுமே பேசாவிட்டால் கூட, என்னை பற்றி எழுதுவீர்கள். என்னுடைய கருத்துகள் திரித்து வெளியிடப்படுவது, உண்மையில் வருத்தம் அளிக்கிறது.

இவ்வாறு சல்மான்கான் தெரிவித்தார்.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions