சல்மான்கான் மான் வேட்டை வழக்கு படமாகிறது

Bookmark and Share

சல்மான்கான் மான் வேட்டை வழக்கு படமாகிறது

இந்தி நடிகர் சல்மான்கான் மானை வேட்டையாடிய வழக்கின் இறுதி தீர்ப்பு வருகிற 25–ந்தேதி வருகிறது.

இந்த வழக்கில் சல்மான்கான் ஏற்கனவே கைதாகி ஜெய்ப்பூர் சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார். அவருக்கு 210 என்ற கைதி எண் கொடுக்கப்பட்டு இருந்தது.
இந்த மான் வேட்டை வழக்கு சினிமா படமாகிறது. சல்மான்கானுக்கு வழங்கப்பட்ட கைதி எண்ணைக் கொண்டே ‘கைதி நம்பர் 210’ என்று இப்படத்துக்கு பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ரஞ்சித் சர்மா இயக்குகிறார்.

சல்மான்கான் வேடத்தில் அவரைப் போன்ற சாயலில் இருக்கும் உஸ்மான்கான் நடிக்கிறார். சல்மான்கானுடன் ஜெயிலில் இருந்த மகேஷ் சைனி என்பவர் அதே கேரக்டரிலேயே இந்த படத்திலும் நடிக்கிறார்.

சல்மான்கான் மான் வேட்டையாடிய போது அவரது வாகனத்தை ஹரீஸ் துலானி என்பவர் ஓட்டினார். அவரையே படத்திலும் டிரைவராக நடிக்க வைத்துள்ளனர். மான் வேட்டையின் போது சல்மான்கான் சென்ற அதே வாகனமும் இந்த படத்தில் பயன்படுத்தப்படுகிறது.

படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது. 25–ந்தேதி தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதை பார்த்து விட்டு அதன்படி கிளைமாக்ஸ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். 


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions