சல்மான்கான் படத்தில் ரஜினி நடிக்க மறுத்தது ஏன்?

Bookmark and Share

சல்மான்கான் படத்தில் ரஜினி நடிக்க மறுத்தது ஏன்?

சல்மான்கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகி, கடந்த வாரம் வெளிவந்த படம் ‘பஜ்ரங்கி பாய்ஜான்’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது முதல் படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் கடந்த வாரம் வெளிவந்த இந்த படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. 

அதுமட்டுமில்லாமல், இப்படத்தை பற்றி வெளிவந்த விமர்சனங்களும் படம் நன்றாக இருப்பதை உறுதி செய்யவே, தற்போது படம் வசூலில் களைகட்டி வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தில் நடிக்க முதலில் ரஜினிகாந்தைத்தான் இயக்குனர் அணுகியதாக தற்போது செய்திகள் வந்துள்ளது. இப்படத்தை இயக்கிய கபீர்கான், இப்படத்தின் கதையை முதலில் ரஜினிகாந்திடம்தான் கூறியுள்ளார். 

ரஜினி, அப்போது ‘லிங்கா’ படத்தின் பணிகளில் பிசியாக ஈடுபட்டிருந்ததால், இந்த படத்திற்கான தேதிகளை ஒதுக்கமுடியாமல் போனது. பிறகு அந்த வாய்ப்பு சல்மான்கானுக்கு சென்றதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions