ரூ.200 கோடி முதலீட்டில் சல்மான்கான் நடித்த கடைசி 2 படங்கள்

Bookmark and Share

ரூ.200 கோடி முதலீட்டில் சல்மான்கான் நடித்த கடைசி 2 படங்கள்

நடிகர் சல்மான்கான் மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தார். அவருக்கு வயது 49. இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய், சகோதரர், சகோதரியுடன் மும்பையில் வசித்து வந்தார்.

உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். 1989–ல் மைனோ பியார் கியா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து சாஜன், ஹம் ஆப்கே ஹைன்கூன், குச்குச் கோதா ஹே, சரன் அர்ஜூன், பிவி நம்பர்–1 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகரானார். டி.வி. நிகழ்ச்சிகளும் நடத்தியுள்ளார்.

பழம்பெரும் கவர்ச்சி நடிகை ஹெலன் இவரது வளர்ப்பு தாய் ஆவார். இவரும் சல்மான்கானுடன் சில படங்களில் நடித்தார். 1999–ம் ஆண்டு முதல் சல்மான்கான் நடிகை ஐஸ்வர்யாராயுடன் நட்பு வைத்திருந்தார். 2001–ல் அது முறிந்தது. பின்னர் நடிகை கத்ரினா கயூப்புடன் நட்பாக இருந்து வந்தார். சங்கீதா பிஜ்வானி, சோமி அலி ஆகியோரும் முன்பு சல்மான்கானுடன் நெருங்கிய நட்பு வைத்திருந்தனர்.

தற்போது நடிகர் சல்மான்கான் ‘பஜ்ரங்கி பாய் ஜான்’ என்ற படத்தில் நடிகை கரீனா கபூருடனும். ‘பிரேம் ரத்தன் தான் பாயோ’ என்ற படத்தில் சோனம் கபூருடனும் நடித்து வந்தார். இந்த இரு படங்களிலும் ரூ. 200 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த படங்களின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. தண்டனை வழங்கப்பட்டதால் இந்த 2 படங்களும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதற்கு முன்னதாக சல்மான்கானின் ‘தபாங் –3’ ‘என்டிரி மெயின் நோ என்டிரி’ ஆகிய 2 படங்கள் ரிலீசுக்கு காத்து இருக்கிறது. 

 


Post your comment





Related News
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அனாதையாக மருத்துவமனையில் பிரபல நாயகி- அதிர்ச்சியான ரசிகர்கள்
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
துல்கர் சல்மான் படத்தில் வாய்ப்பு குறித்து ஓபனாக பேசிய ரக்ஷன்.!
அஜித்தின் மெகா ஹிட் பாடலுக்கு மேடையில் நடனமாடிய பிரபல நடிகர் - யாருனு பாருங்க.!
ஸ்ரீ தேவியின் உடலை பார்த்து கதறி அழுத பிரபல நடிகர், சோகத்தில் மூழ்கிய மும்பை.!
மெகா ஹிட் நடிகரின் படத்தில் ரக்ஷன் - யார் தெரியுமா?
துல்கர் சல்மான் 6 வருடங்கள், 25 திரைப்படங்கள்! கௌதம் மேனனின் சிறப்பான பரிசு!!
வெளிநாட்டு வசூல் மட்டும் 100 கோடி என்றால், அப்போது இந்தியாவில்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions