சல்மான் கானின் சர்ச்சை கருத்தால் மன்னிப்பு கேட்ட அவர் தந்தை சலிம் கான்!

Bookmark and Share

சல்மான் கானின் சர்ச்சை கருத்தால் மன்னிப்பு கேட்ட அவர் தந்தை சலிம் கான்!

ஹிந்தி நடிகரான சல்மான்ன் தற்போது ‘சுல்தான்’ படத்தில் மல்யுத்த வீரராக நடித்துள்ளார். அப்படத்தின் பிரமோஷன் விழாவின்போது கலந்து கொண்ட சல்மான் கான் “இந்த படத்துக்காக 6 மணி நேரம் தொடர்ந்து படப்பிடிப்பில் முழு ஈடுபாட்டுடன் இருந்தேன். மல்யுத்த காட்சியில் நடிக்கும்போது 120 கிலோ எடை உள்ள ஒருவரை 10 முறை, வித்தியாசமான கோணத்தில் தூக்கினேன். இதுபோல் பல தடவை செய்ய வேண்டியது இருந்தது.

இது உண்மையான சண்டையாகவே அமைந்தது. திரும்பத் திரும்ப இதுபோன்ற காட்சிகளை படமாக்கியபோது நான் மிகவும் சோர்ந்து விட்டேன். நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியே வந்தபோது ஒரு கற்பழிக்கப்பட்ட பெண் போன்ற வேதனையை உணர்ந்தேன். நான் முழு பலத்துடன் நடக்க முடியவில்லை. சாப்பிடும் போதும், மீண்டும் பயிற்சியில் ஈடுபட்ட போதும் உடல் வலி இருந்தது. வலி குறையவில்லை. என கூறியிருந்தார்.

 மேலும் அவர் தன் கருத்தில் கற்பழிக்கப்பட்ட பெண்களை தனது படப்பிடிப்புடன் ஒப்பிட்டு பேசியதால் “இது கண்டனத்துக்குரியது என்று மகளிர் அமைப்புகள் பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்து வருகின்றன. இதற்கு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சில அமைப்புகள் போர்க்கொடி தூக்கிவுள்ளனர்”.

எனவே இது குறித்து அவரது தந்தை சலிம் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள சலிம் கான், ‘சுல்தான் பட அறிமுக விழாவில் சல்மான் கான் தெரிவித்திருந்த கருத்து சந்தேகத்துக்கு இடமின்றி தவறானதுதான். அவரது உவமை, உதாரணம் போன்றவை தவறானது, எனினும், அந்த கருத்தை பதிவு செய்த அவரது நோக்கம் தவறானது அல்ல.

இருந்தாலும், சல்மான் கானின் குடும்பத்தார், ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் சார்பில் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’என கூறிவுள்ளார்.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions