ஜாமீனுக்கு பிறகு முதன்முறையாக தங்கை திருமண வரவேற்பில் பங்கேற்கிறார் சல்மான்கான்

Bookmark and Share

ஜாமீனுக்கு பிறகு முதன்முறையாக தங்கை திருமண வரவேற்பில் பங்கேற்கிறார் சல்மான்கான்

நடிகர் சல்மான்கானுக்கு குடி போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் மும்பை நீதிமன்றம் 4 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளார். 

அப்பீல் மனுவை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு சல்மான்கானை ஜாமீன் வழங்கி உத்தர விட்டுள்ளது. இந்த நிலையில் ஜாமீன் வழங்கிய பின்பு முதல் நிகழ்ச்சியாக நடிகர் சல்மான் கான் இமாச்சல பிரதேசத்தில் நடைபெறும் தனது தங்கை திருமண வரவேற்பில் கலந்து கொள்கிறார். 

சல்மான்கான் தங்கை அர்பிதா கானுக்கும் முன்னாள் மத்திய மந்திரி சுக்ராம் பேரன் ஆயுசுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. சுக்ராமின் மகன் அனில் சர்மா இமாச்சல பிரதேச காங்கிரஸ் மந்திரி சபையில் மந்திரியாக இருக்கிறார். அனில் சர்மாவின் மகன்தான் மணமகன் ஆயுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி நகரில் உள்ள ஜிம்கானா கிளப்பில் நாளை மாலை நடக்கிறது. இதில் நடிகர் சல்மான் கான் தனது குடும்பத்தினருடன் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் மும்பையில் இருந்து விமானத்தில் சண்டிகார் செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மாண்டி செல்ல திட்டமிட்டுள்ளார். 

சண்டிகாரில் இருந்து மாண்டி வர சல்மான்கானுக்கு அரசு ஹெலிகாப்டர் வழங்கு மாறும் அவருக்கு மாநில அரசின் விருந்தினர் அந்தஸ்து அளிக்குமாறும் மணமகன் குடும்பத்தார் மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். வரவேற்பு நிகழ்ச்சியில் 20,000–க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ளும் வகையில் தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions