சல்மான்கானிடம் ரூ.250 கோடி கேட்டு தயாரிப்பாளர் வழக்கு

Bookmark and Share

சல்மான்கானிடம் ரூ.250 கோடி கேட்டு தயாரிப்பாளர் வழக்கு

சல்மான்கான் நடித்த வீர் படத்தை தயாரித்தவர் விஜய் கலானி. படம் தயாரிப்பதற்கு முன்பு சல்மான் கானுக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக கொடுத்தார். படம் வெளியான பிறகு அதன் லாபத்திலிருந்து 15 கோடி சல்மானுக்கு சம்பளமாக வழங்கப்படும் என்று ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் படம் எதிர்பார்த்தபடி ஓடி லாபம் ஈட்டவில்லை. இதனால் தயாரிப்பாளர் சல்மான்கானுக்கு மீதி 15 கோடியை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் சல்மான்கான் அந்த ஒப்பந்தம் செல்லாது எனக்கு தரவேண்டிய 15 கோடியை பெற்றுத் தரவேண்டும் என்று  இந்தி நடிகர் சங்கத்தில் புகார் செய்தார். புகாரை விசாரித்த நடிகர் சங்கம் தயாரிப்பாளர் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறிவிட்டது. இதனை எதிர்த்து சல்மான்கான் மேற்கிந்திய சினிமா சங்கத்தில் புகார் செய்தார். இந்த சங்கம் சல்மான்கான் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியதோடு தயாரிப்பாளர் விஜய் கலானிக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்ற முடிவை அறிவித்தது. இதனை இந்தி நடிகர் சங்கம் ஏற்கவில்லை.

இந்த நிலையில் சல்மான்கான் மீது தயாரிப்பாளர் விஜய் கலானி, ரூ. 250 கோடி கேட்டு அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். இது இந்தி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


Post your comment





Related News
பிரபல இந்தி நடிகர் காதர் கான் உடல்நலக்குறைவால் காலமானார்
என் இமேஜை அடங்க மறு உடைத்திருக்கிறது - ராஷி கண்ணா
நண்பன் ரமேஷ் கண்ணா வீட்டு விசேஷத்தில் கலந்து கொண்ட விஜய்: வைரல் புகைப்படங்கள்
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions